நான்கு வருடங்கள் முன்(2004)'மரத்தடி'யில் எழுதியது.
ஒரு மாதம் முன்பு திடீரென்று என் பெண்களிடம்...
'அபி(ராமி)...வித்யா நா "ஜயன்ட்" சூப்பர் மார்க்கெட் போகப்போறேன், வாங்க வேண்டிய சாமான்களை சொல்றேன் ரெண்டு பேரும் எழுதுங்க' என்றேன்.
'என்னம்மா இது நீங்க தானே எழுதுவீங்க இன்னைக்கு ஏன்? அதுவும் நாங்க ரெண்...டு பேரும் எதுக்கு எழுதணும்'? என்றாள் அபி.
'ம்.. யா...லா...' இது வித்யா
'ஆமா நீங்கதான் எழுதணும் அதுவும் நான் எழுதச் சொல்றது தமிழில்' என்றவுடன் அபி
'அய்யோ...! என்னம்மா தமிழ்லேயா?
'ஹையா! நோ ப்ராப்ளம் நான் எழுதிருவேன் சொல்லுங்கம்மா' என ரெடியாக பேப்பர் பேனாவுடன் தயாராகி விட்டாள் வித்யா !
'அம்ம்ம்...மா..' என்ற சிணுங்கிய அபி சரி சரி என்று(நம்மால் எழுதமுடியுமா என்பது போல்) அரை மனதுடன் தயாரானாள்.
அவர்கள் இருவருக்கும் வீட்டில்தான்(ட்யூஷன் வைத்து) தமிழ் சொல்லிக் கொடுத்தோம், அதன் பிறகு வார, மாத தமிழ் இதழ்கள், செய்தித்தாள் இவைகளை சும்மா புரட்டிப் பார்ப்பதோடு சரி அதைப் படிக்க ஆர்வம் காட்டுவதே இல்லை, சொன்னாலும் அப்புறமா படிக்கிறோம் என்று சொல்லி விடுவார்கள்.
அன்று ஏதோ தோன்றியது இவர்களை இப்படியே விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. (அதுவும் மரத்தடிக்கு வந்ததில் இருந்து அதிகமாகி விட்டது. இவர்களுக்கும் தமிழ் தெரிந்திருந்தால் இங்கு அழைத்து வந்திருக்கலாமே ) அதுதான் மேலே குறிப்பிட்டது.
இருவரும் எழுதி முடித்ததும்,அதை வாங்கி படித்துப் பார்த்ததும் முதலில் சிரிப்பு தாங்க முடியவில்லை நான் படித்துக் காட்ட அவர்களும் சேர்ந்து சிரித்து ...
அதன் பின் இவர்களுக்கு இப்படி அருமையான தமிழ் மொழியை ஒழுங்காக எழுத(படிக்க)த் தெரியவில்லையே என ரொம்ப வருத்தப்பட்டாலும், இன்னொருபுறம் பேசவாவது தெரிகிறதே என சிறிது ஆறுதல்.
சரி அன்று அவர்கள் எழுதிய மளிகை சாமான்கள் லிஸ்டை பார்க்கலாமா?
நான் சொன்னது:
பனங்கல்கண்டு, புளுங்கள் அரிசி, உளுந்தம் பருப்பு, காய்கறிகள், உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய், வாழைக்காய், தக்காளி, பயத்தங்காய், அப்பளம், புளி, துவரம் பருப்பு, சமையல் எண்ணை, மிளகாய்த்தூள், ஆட்டா மாவு, கோதுமை மாவு இப்படி விரிந்தது லிஸ்ட்...
அவர்கள் எழுதியது :
அபிராமி: ----------------- வித்யா:
பனங்கள் கன்டு >>> பனங்கல் கன்டு
புலகெல அரிசி >>> பூலுங்கல் அருஸி
உளரந்து பருபு >>> உலுந்த பறுப்பு
கொய்கரி >>>>>>>> கைகரீள
உருல கிளங்கு >>>> உறுலை கிலங்கு
கத்திரிக் காய் >>>>> கத்திரிக்காய்
வென்டை காய் >>>> வேன்டைக்கை
வாளை காய் >>>>>> வலை காய்
தக்காளி >>>>>>>>>> தக்கலி
பைத்தங் காய் >>>>> பய்தங்கை
அப்பளம் >>>>>>>> அப்பலம்
புலி >>>>>>>>>>>>> புலி
துவரம் பருப்பு >>>>> துவரம் பறுப்பு
சமையல் யென்னை >> சமயல் யேன்னை
மிலகாய் துல் >>>>>> மிலகை துள்
ஆடா மாவு >>>>>>> அட்டா மவு
கொதுமை மாபு >>>>> கோதுமை மவு
தெங் காய் பூ >>>>>> தேங்காய் பூ
இது எப்படி இருக்கு! :))
அபியிடம் கேட்டேன் "மாவு என்பதை ஏன் சரியாக எழுதி விட்டு பிறகு இன்னொன்றுக்கு மாபு என்று எழுதினாய்" என அதற்கு அவள் மாவு, மாபு, என்று சொல்லி பார்த்தாளாம் ஒரே குழப்பமாகி விட்டதாம் அதான் இரண்டையுமே எழுதினேன் என்கிறாள்!!!
என்னத்தைச் சொல்ல :-))))))))))
(இது சிரிக்கும் விஷயமல்ல என்றாலும்)இன்னும்கூட அவர்கள் எழுதியதை படித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன் :)
மீனா
1 கருத்து:
"ரொம்ப வேதனைப் பட வைச்சுட்டீங்க... அழுதுட்டேன்.. மன்னிக்கவும்.",நான் இப்படிச் சொல்லுகிறேன்
இதை உங்கள் நண்பி சொன்னால் இப்படித்தான் சொல்லுவாங்களோ?
"ரெம்ப வெதநைப்பட வெச்சுட்டீண்க அளுதுட்டேண் மந்நிக்கவும்."
கருத்துரையிடுக