தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்.
செய்ய முடியும் என நினைத்தாலும்,செய்ய முடியாது என நினைத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் -ஹென்றி ஃபோர்டு
சனி, டிசம்பர் 25, 2010
செவ்வாய், நவம்பர் 23, 2010
அப்பச்சி...10
எங்க காடி அந்த ரோடுல நேரே போயி வளஞ்சு திரும்பி எதித்த பக்கத்தில வரிசையா இருந்த ஒரு (கிட்டங்கி)வீட்டுக்கு முன்னால நின்னுச்சு.
புதன், நவம்பர் 10, 2010
அப்பச்சி... 9
தைப்பிங்கில் அப்பச்சியை எல்லாருக்கும் நல்லாத் தெரியுமாம்!ரெம்ப நல்லவுகன்னு எல்லாரும் சொல்லுவாங்களாம்.அங்கே கிட்டங்கி இருக்கு அங்கதான் அப்பச்சி மணிலெண்டிங் பண்ணிக்கிட்டுருக்காங்க…..
'தைப்பிங்' ரொம்ப அழகான ஊராம்!..
'தைப்பிங்' ரொம்ப அழகான ஊராம்!..
திங்கள், நவம்பர் 01, 2010
அப்பச்சி 8
வழி பூரா அண்ணன் சிரிக்க சிரிக்க ஏதேதோ பேசிக்கிட்டே வந்தாங்க ஆத்தா எதுக்குமே சரியாப் பேசலை. அவுக கேட்டதுக்கு மட்டும் என்னமோ சொல்லிக் கிட்டிருந்தாங்க...
செவ்வாய், அக்டோபர் 19, 2010
அப்பச்சி... 7
அப்போ...? இங்கேயிருந்து அக்கரை போவதற்கே அரை மணி நேரமாகும்அதுக்கப்புறம் அங்கேயிருந்து ரெண்டரை மணி நேரம் என்றால் மூணு மணிநேரத்துக்குமேல ஆகுமே '?ஆத்தா குரல் என்னமோ மாதிரி..
திங்கள், அக்டோபர் 04, 2010
அப்பச்சி... 6
அப்பத்தான் அங்கு வந்த ஒருத்தர் ஆத்தாவை பாத்து " ஆ.. ச்சி..." அப்படின்னு சத்தமா கூப்பிட்டு கிட்டு ஆத்தாகிட்ட ஏதோ சொல்ல வேகமா வந்தவரை அங்கிருந்தவங்க அவசரமா ஓடிவந்து'அண்ணே அண்ணே இருங்க இங்க வாங்க' ன்னு அவர் கையை பிடிச்சு இழுத்து கூட்டிகிட்டு போக நானும் ஆத்தாவும் ஒண்ணும் விளங்காம பார்த்துக் கிட்டிருக்க'
சரி சரி நேரமாகுது வாங்க சொணங்காம புறப்படலாம்னு அம்மான் சொல்ல அங்கேருந்து எல்லாரும் புறப்பட ..
சரி சரி நேரமாகுது வாங்க சொணங்காம புறப்படலாம்னு அம்மான் சொல்ல அங்கேருந்து எல்லாரும் புறப்பட ..
புதன், செப்டம்பர் 22, 2010
அப்பச்சி... 5
நாங்க போன போட் சின்னதா வெயில் படாம இருக்க மேல மூடியிருந்துச்சு, உள்ளே எதிர் எதிரே பெஞ்ச் மாதிரி போட்டிருந்துச்சு. அதில் நானும் ஆத்தாவும் ஒரு பக்கமும், எதித்தாப்ல அந்த அண்ணனும் கூடவந்த ரெண்டு இமிகிரேஷன் ஆஃபீஸர்களும் உக்காந்திருந்தாங்க...
வியாழன், செப்டம்பர் 09, 2010
அப்பச்சி... 4
ரூம் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஆத்தா… யாரோ கூப்பிடுகிறாங்க கதவத் தெறக்கவா..? கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஆத்தாவே வந்து கதவைத் திறக்க வெளியில.. ஆத்தாவோடசொந்தக்காரர் (கப்பலில் உள்ள மேலும் இரு அதிகாரிகளுடன்) நின்று கொண்டிருந்தார்...!
திங்கள், ஜூலை 26, 2010
அப்பச்சி.. 3
ஊரில் (மெட்றாஸில்) இருந்து புறப்படும் அன்னைக்கு ஹார்பருக்கு ஆச்சி(அக்கா ) அண்ணன் ரெண்டுபேரும் வழியனுப்புவதற்கு வந்திருந்தாங்க, ஆச்சி அவளோட (நாலுமாத)குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். அவளுக்கு அப்பச்சியிட்ட குழந்தையை காமிக்கணும்னு ரெம்ப ஆச ..
ஞாயிறு, ஜூலை 11, 2010
அப்பச்சி - 2
‘காலையில சீக்கிரமா எந்திருச்சு பாஸ்போட்டெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு தயாரா இருக்கணும், இமிகிரேஷன் அதிகாரிங்கல்லாம் வெள்ளனவே வந்திருவாக ஒம்போது மணிக்கெல்லாம் சோதனை ஆரமிச்சுருவாக முன்னாடியே போய் வரிசையா நிக்கணும் அந்தா இந்தான்னு மத்தியானம் ஒருமணி ரெண்டுமணியாயிரும் கரையெறங்குறதுக்கு என்று ஒருத்தர்(அவர் நெறையத்தடவை கப்பலில் போய் வந்துகிட்டு இருக்காராம்)எல்லோரிடமும் சொல்லிக்கிட்டிருந்தார்.
ஞாயிறு, ஜூன் 20, 2010
அப்பச்சி... 1
”அன்பான இனிய தந்தையர் தின நல் வாழ்த்துகள்!"
முன்பு ”தோழியர்” வலைப்பதிவிலும்,பின்பு “தமிழோவியம்”த்திலும் வெளி வந்த பதினோரு பாகங்கள் கொண்ட ’அப்பச்சி’தொடர் கதையை இன்று தந்தையர் தினத்தின் நினைவாக மீள் பதிவு செய்கிறேன்.தங்களின் மேலான கருத்துக்களை தந்து செல்லுங்கள்.
நன்றியுடன் அப்பச்சியின் அன்பு மகள்!
அப்பச்சி
‘முந்தா நா, நேத்து,இன்னைக்கோட மூணு நாளாச்சு இன்னொம் மூணுநா போச்சுன்னா அதுக்கடுத்தனா காலைல அப்பச்சியை பாத்துறலாம்ல (அம்மா)ஆத்தா?’.
ஞாயிறு, மே 30, 2010
அற்புதம்!
கைலாஷ்! வார்த்தையை உச்சரிக்கும்போதே உள்ளத்தில் ஏற்படும் பரவசத்தை என்னவென்று சொல்ல! உச்சரிப்பதற்கே இந்த நிலை என்றால் நேரில்
சென்றால்!சொல்ல வார்த்தைகள் இல்லை.
அப்படியொரு பேரு பெற்றவர்கள்!வணங்குகிறேன் இவர்களை.
நன்றி: திருக்கயிலாய நந்தி கிரி வலம்
புதன், மே 19, 2010
நாதஸ்வரம்
சீரியல் என்றாலே மனதில் ஒரு வெறுப்பு. அதை மாற்றி விட்டது சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் அரங்கேறிய இந்த நாதஸ்வரம்! ஆனாலும் மனதிற்குள் சின்ன சந்தேகம், ஒரு வேண்டுதல். போகப் போக நாடகத்தின் தன்மை மாறி விடாமல் இதை இப்படியே தொடர வேண்டும் இதன் இயக்குனர் என்று.
இயல்பான நடையில் எந்த வித ஆடம்பரம் அலட்டல் மேல்பூச்சு ஏதும் இல்லாத ஒரு தொலைக்காட்சி சீரியல் இந்த நாதஸ்வரம்! இதில் தோன்றும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் நடிப்பும்..! ம்ஹூம் நடிப்பென்றே சொல்லக்கூடாது! அவர்கள் அவர்களாவே வாழ்கிறார்கள்! சூழ்நிலையும் அவ்வாறே!
நாடகம் என்பதை காட்டிலும் அன்றாடம் சாதாரண குடும்பத்தினரின் வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளை (இடையிடையே நகைச்சுவை கலந்து) அப்படியே வீடியோ பதிவு போல்! நமக்கு அளித்திருக்கிறார், இதன் இயக்குனரும், கதாநாயகனுமான திருமுருகன்.
இன்னும் இது பற்றி சொல்லலாம்! மொத்தத்தில் (மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு :) நல்ல இசை!
இயல்பான நடையில் எந்த வித ஆடம்பரம் அலட்டல் மேல்பூச்சு ஏதும் இல்லாத ஒரு தொலைக்காட்சி சீரியல் இந்த நாதஸ்வரம்! இதில் தோன்றும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் நடிப்பும்..! ம்ஹூம் நடிப்பென்றே சொல்லக்கூடாது! அவர்கள் அவர்களாவே வாழ்கிறார்கள்! சூழ்நிலையும் அவ்வாறே!
நாடகம் என்பதை காட்டிலும் அன்றாடம் சாதாரண குடும்பத்தினரின் வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளை (இடையிடையே நகைச்சுவை கலந்து) அப்படியே வீடியோ பதிவு போல்! நமக்கு அளித்திருக்கிறார், இதன் இயக்குனரும், கதாநாயகனுமான திருமுருகன்.
இன்னும் இது பற்றி சொல்லலாம்! மொத்தத்தில் (மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு :) நல்ல இசை!
வியாழன், மே 13, 2010
ஒரு வழி சொல்லுங்களேன்
ரொம்ப நாளாய் பாடாய் படுத்தற விஷயம்.
கொஞ்சநேரம் சமையல் கட்டைவிட்டு வந்தால்
போதும் உடனே ஃப்ரிஜுக்கு கீழிருந்தோ அல்லது
ஏதாவது இடுக்கிலிருந்தோ சத்தமில்லாமல்
வந்து சட்டென்று சாப்பாட்டு மேஜையின்
மேல் ஏறி உலா வர ஆரம்பிக்கும். நாம் வருவது
எப்படித்தான் தெரியுமோ நாம் ஒரு காலை உள்
வைக்கும்போதே கண்டுகொண்டு மேஜைக்கு
கீழே எங்காவது நழுவி அப்படியே பதுங்கிக்
கொள்ளும் அப்போத்தானே மறுபடி நாம்
நகர்ந்தால் சட்டென்று வெளிவந்து (எதிலடா
வாய் வைக்கலாம்னு)விட்டஇடத்தில் இருந்து
தொடர முடியும்.
கொஞ்சநேரம் சமையல் கட்டைவிட்டு வந்தால்
போதும் உடனே ஃப்ரிஜுக்கு கீழிருந்தோ அல்லது
ஏதாவது இடுக்கிலிருந்தோ சத்தமில்லாமல்
வந்து சட்டென்று சாப்பாட்டு மேஜையின்
மேல் ஏறி
எப்படித்தான் தெரியுமோ நாம் ஒரு காலை உள்
வைக்கும்போதே கண்டுகொண்டு மேஜைக்கு
கீழே எங்காவது நழுவி அப்படியே பதுங்கிக்
கொள்ளும் அப்போத்தானே
நகர்ந்தால் சட்டென்று வெளிவந்து (எதிலடா
வாய் வைக்கலாம்னு)விட்டஇடத்தில் இருந்து
தொடர முடியும்.
அப்படி உலாவரும்போது தப்பித்தவறி நம் கண்களில்
பட்டாலோ வெறுக்கென்று நம் உடலில் ஒரு உணர்வு
தோன்றுமே அய்யே.. அவ்வளவுதான் அதுக்கப்புறம்
மேஜை மேலிருக்கும் அத்தனை பண்டங்கள்மேலும்
(மூடி இருந்தால்கூட)சந்தேகம் வர ஆரம்பிக்கும் இதில்
ஏறி இருக்குமோ அதில் வாய் வைத்திருக்குமோ என்று
எதைப்பார்த்தாலும் அருவருப்பு.
பட்டாலோ வெறுக்கென்று நம் உடலில் ஒரு உணர்வு
தோன்றுமே அய்யே.. அவ்வளவுதான் அதுக்கப்புறம்
மேஜை மேலிருக்கும் அத்தனை பண்டங்கள்மேலும்
ஏறி இருக்குமோ அதில் வாய் வைத்திருக்குமோ
எதைப்பார்த்தாலும் அருவருப்பு.
சரி பாவம் சாப்பாடு கிடைக்காமல்த் தானே இப்படி
அலையுதுகள் அதனாலே நாமே வேளா வேளைக்கு
சாப்பாடு போட்டுட்டா அப்புறம் இந்த தொந்தரவு
இல்லை அதுக பாட்டுக்கு சாப்பிட்டுட்டு தொந்தரவு
செய்யாமலாவது இருக்கும் என்றுஅதுங்க பதுங்கற
இடமா பாத்து பாத்து சோறு அல்லது தோசை இனிப்பு
எல்லாம் நம்ம சாப்பிடறதை போடணும் அதுகளுக்கு
தெரியும் இல்லாட்டினா மறுபடி நம்மோட பங்குபோட
மறுபடி மேஜை மேல ஏறிரும்ல(எல்லாம் ஒரு
நினைப்புத்தான்:) என்று வகை வகையா போட்டா
அதை மோந்து கூட பாக்காது பழையபடி மேஜைதான்!
அங்கே போட்ட சாப்பாடு காஞ்சுபோய். கிடக்கும் ம்ம்..
அலையுதுகள் அதனாலே நாமே வேளா வேளைக்கு
சாப்பாடு போட்டுட்டா அப்புறம் இந்த தொந்தரவு
இல்லை அதுக பாட்டுக்கு சாப்பிட்டுட்டு தொந்தரவு
செய்யாமலாவது இருக்கும் என்றுஅதுங்க பதுங்கற
இடமா பாத்து பாத்து சோறு அல்லது தோசை இனிப்பு
எல்லாம் நம்ம சாப்பிடறதை போடணும் அதுகளுக்கு
தெரியும் இல்லாட்டினா மறுபடி நம்மோட பங்குபோட
மறுபடி மேஜை மேல ஏறிரும்ல(எல்லாம்
நினைப்புத்தான்:) என்று வகை வகையா
அதை மோந்து கூட பாக்காது பழையபடி
அங்கே போட்ட சாப்பாடு காஞ்சுபோய்.
இதுல இன்னோரு கஷ்டம் நாம நடக்கும் போது
கால்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்கும் ஓடி
அதும்மேல மிதிக்காம இருக்க நாம் இ..இ.. ஈ..ஏ..இ..
ன்னு(வினோதமான சத்தங்களுடன்) பரதநாட்டியம்
வேற கத்து வச்சுக்கனூம்.
கால்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்கும் ஓடி
அதும்மேல மிதிக்காம இருக்க நாம் இ..இ.. ஈ..ஏ..இ..
ன்னு(வினோதமான சத்தங்களுடன்) பரதநாட்டியம்
இந்த பல்லியை(அதுக்கு எந்த தொந்தரவும் செய்யாம)
விரட்டறதுக்கு என்னதான் வழி? தயவு செய்து
யாராவது சொல்லுங்களேன்.
விரட்டறதுக்கு என்னதான் வழி? தயவு செய்து
யாராவது சொல்லுங்களேன்.
சனி, மே 08, 2010
அனைவருக்கும் அன்னையானவள் !
அன்னையர் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்!
குழுமத்தில் நண்பர் தமிழ்த்தேனி அவர்கள் இட்ட இந்த
பாடல் வெகுவாக கவர்ந்தது. அன்னையர் தினத்தின்
நினைவாக அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
கற்பெனும் தரத்தை கண்ணியமாய்க் காத்து
அப்பனின் விந்தை யற்புதப் பந்தில்
வாங்கித் தாங்கி கருவாக்கி உருவாக்கி
இடிபோன்ற வலிதாங்கி இடைவழியே
வெளிவாங்கி கனக முலைவழியே
உதிரத்தைப் பாலாக்கி அன்போடு
அரவணைத்தூட்டி கைகால் முளைக்க
வைத் தறிவும் ஆயுளும் அணுக்குள்
நுணுக்கி அற்புதமாய் காத்து
அப்பனையும் அடையாளம் காட்டிய
அற்புதப் படைப்பாளி அம்மா!
அம்மா என்றால் அம்மா
-தமிழ்த்தேனீ
குழுமத்தில் நண்பர் தமிழ்த்தேனி அவர்கள் இட்ட இந்த
பாடல் வெகுவாக கவர்ந்தது. அன்னையர் தினத்தின்
நினைவாக அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
கற்பெனும் தரத்தை கண்ணியமாய்க் காத்து
அப்பனின் விந்தை யற்புதப் பந்தில்
வாங்கித் தாங்கி கருவாக்கி உருவாக்கி
இடிபோன்ற வலிதாங்கி இடைவழியே
வெளிவாங்கி கனக முலைவழியே
உதிரத்தைப் பாலாக்கி அன்போடு
அரவணைத்தூட்டி கைகால் முளைக்க
வைத் தறிவும் ஆயுளும் அணுக்குள்
நுணுக்கி அற்புதமாய் காத்து
அப்பனையும் அடையாளம் காட்டிய
அற்புதப் படைப்பாளி அம்மா!
அம்மா என்றால் அம்மா
-தமிழ்த்தேனீ
செவ்வாய், ஏப்ரல் 13, 2010
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
கருப்பர் கோவில்
கருப்பண்ணன் வாழ்கின்ற
ராங்கியம் சென்றிட்டால்
காலமும் காத்து நிற்பான்.
கண்போன்ற மாதராம்
ஏகாத்தா ராக்கம்மை
கருணையாம் அன்பை ஈவார்
விருப்பின்றி வெறுப்பின்றி
வந்திட்ட அனைவருக்கும்
விரும்பிய வரம் அருள்வான்
விளயாத நிலத்தையும்
விளவித்து காட்டியே
வித்தைகள் புரிந்து நிற்பான்
உருகியே தினம் பாடி
உள்ளத்தில் வைத்திட்டால்
உலகினை ஆளவைப்பான்
உறவென்று அவனையே
உறுதியாய் பற்றிட்டால்
உண்மைகள் புரியவைப்பான்
இரு பொழுதும் விளக்கேற்றி
இல்லத்தில் கும்பிடவே
இன்முகம் காட்டிவருவான்
இல்லாமை நிலைபோக்கி
எல்லாமும் பெற்றிடவே
என்றென்றும் அருள் புரிவான்
-அரிமழம் செல்லப்பா
கருப்பண்ணன் வாழ்கின்ற
ராங்கியம் சென்றிட்டால்
காலமும் காத்து நிற்பான்.
கண்போன்ற மாதராம்
ஏகாத்தா ராக்கம்மை
கருணையாம் அன்பை ஈவார்
விருப்பின்றி வெறுப்பின்றி
வந்திட்ட அனைவருக்கும்
விரும்பிய வரம் அருள்வான்
விளயாத நிலத்தையும்
விளவித்து காட்டியே
வித்தைகள் புரிந்து நிற்பான்
உருகியே தினம் பாடி
உள்ளத்தில் வைத்திட்டால்
உலகினை ஆளவைப்பான்
உறவென்று அவனையே
உறுதியாய் பற்றிட்டால்
உண்மைகள் புரியவைப்பான்
இரு பொழுதும் விளக்கேற்றி
இல்லத்தில் கும்பிடவே
இன்முகம் காட்டிவருவான்
இல்லாமை நிலைபோக்கி
எல்லாமும் பெற்றிடவே
என்றென்றும் அருள் புரிவான்
-அரிமழம் செல்லப்பா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)