நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை!!
-----------------------------------------------------
உலகில் உள்ள அனைவருக்கும் எதோ ஒரு கடமை இருக்கும்.எதோ ஒரு பொறுப்பும் இருக்கும்.
அது அவர்களது அறியாமையை தவிர வேறில்லை.
எது உங்களது கட்டுப்பாட்டில் உள்ளது சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் உடலே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே.
உங்கள் உடம்பே உங்கள் பேச்சை கேட்காதபோது உலகில் வேறு யார் கேட்பார்?
உடலை விடுங்கள்.
உங்கள் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிருவதும், வழுக்கை விழுவதும் யாருக்கத்தான் பிடிக்கும்?
ஆனால் முடி நரைப்பதயோ உதிருவதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!!
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?
தெரியாது.
உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்?
அதுவாக ஜீரணம் ஆகிறது.
இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?
இல்லையே.
இப்படி உங்களுக்கு சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப்பாட்டிலும்,
உங்களது பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலதையும் உங்கள் பொறுப்பு
என்று நீங்கள் சிந்திப்பது எவ்வளவு அறியாமை.
மழை உங்களைக்கேட்டா வானிலிருந்து பொழிகிறது?
மரம் உங்களைக்கேட்டா முளைகிறது?
உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது?
நக்ஷத்திரங்கள் உங்களின் பொறுப்பிலா ஜொலிக்கிறது?
நீங்கள்தான் வானில் உள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப்பிடிப்பவரோ??
உங்கள் பொறுப்புணர்ச்சியும் கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை?
எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை. எதற்கும் நீங்கள் பொறுப்பும் இல்லை.
அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக்கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை.அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குயறதோ அது அனைத்தையுமே பார்த்துக்கொள்ளும்.
உங்களுக்கு ஏன் வீண் கவலை?
எதுவும் உங்கள் கையில் இல்லை. அமைதியாய் இருங்கள்!!!
நாராயணா
நாராயணா...
எதுவும் உங்கள் கையில் இல்லை. அமைதியாய் இருங்கள்!!!
நாராயணா
நாராயணா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக