சனி, டிசம்பர் 28, 2019

2020 ம் வருடத்திற்கான முக்கிய பண்டிகைகளின் அட்டவனை

🙏✨அனைவருக்கும் அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!✨🙏



2020 ம் ஆண்டில் வரும் இந்துக்களின் பண்டிகை மற்றும் விஷேசமான நாட்களின் அட்டவணை..

ஜனவரி 2020

06 திங்கள் வைகுண்ட ஏகாதசி
10 வெள்ளி ஆருத்ரா தரிசனம்
14 செவ்வாய் போகி பண்டிகை
15 புதன் பொங்கல்
16 வியாழன் மாட்டுப் பொங்கல்
24 வெள்ளி தை அமாவாசை

பிப்ரவரி 2020

01 சனி ரத சப்தமி
08 சனி தைப்பூசம்
21 வெள்ளி சிவராத்திரி


மார்ச் 2020

08 ஞாயிறு மாசி மகம்
14 சனி காரடையான் நோன்பு
25 புதன் தெலுங்கு புத்தாண்டு

ஏப்ரல் 2020

02 வியாழன் இராம நவமி
07 செவ்வாய் பங்குனி உத்திரம்
14 செவ்வாய் புத்தாண்டு, விஷூ
26 ஞாயிறு அட்சய திருதியை
28 செவ்வாய் சங்கரர் ஜெயந்தி, ராமானுஜ ஜெயந்தி


மே 2020

04 திங்கள் அக்னி நக்ஷத்ரம் தொடங்கு
07 வியாழன் சித்ரா பௌர்ணமி
28 வியாழன் அக்னி நக்ஷத்ரம் முனைகள்

ஜூன் 2020

04 வியாழன் வைகாசி விசாகம்


ஜூலை 2020

20 திங்கள் ஆடி அமாவாசை
24 வெள்ளி ஆண்டாள் ஜெயந்தி
25 சனி கருட பஞ்சமி
26 ஞாயிறு ஆவணி அவிட்டம் *இருக்கு வேதம்
31 வெள்ளி வரலட்சுமி நோன்பு

ஆகஸ்ட் 2020

02 ஞாயிறு ஆடிப்பெருக்கு
03 திங்கள் ஆவணி அவிட்டம் *யசுர் வேதம்
04 செவ்வாய் காயத்ரி ஜெபம்
07 வெள்ளி மகா சங்கடஹர சதுர்த்தித்
11 செவ்வாய் கோகுலாஷ்டமி
12 புதன் கோகுலாஷ்டமி
22 சனி சாம வேதம் உபாகர்மா, விநாயகர் சதுர்த்தி
31 திங்கள் ஓணம்


செப்டம்பர் 2020

07 திங்கள் மஹா பரணி
10 வியாழன் அஷ்டமி ரோகினி
15 செவ்வாய் மக்ஹா ஸ்ராத்த
17 வியாழன் மகாளய அமாவாசை

அக்டோபர் 2020

17 சனி நவராத்திரி
25 ஞாயிறு ஆயுத பூஜை, சரசுவதி பூஜை, விஜயதசமி
26 திங்கள் வித்யாரம்பம்


நவம்பர் 2020

14 சனி தீபாவளி, லக்ஷ்மி பூஜை, கேதார கெளரி விரதம்
20 வெள்ளி சூரசம்ஹாரம்
29 ஞாயிறு கார்த்திகை தீபம்

 டிசம்பர் 2020

19 சனி சுப்பிரமணிய சஷ்டி
25 வெள்ளி வைகுண்ட ஏகாதசி
30 புதன் ஆருத்ரா தரிசனம்....

         - சித்தர்களின் குரல்

திங்கள், நவம்பர் 28, 2016

எழுத்து!


இருந்தவரெல்லாம் இல்லாதவராகிப்போக
இருப்பவரெல்லாம் இயலாதவராகிப்போனார்!
ஒன்றுக்கும் உதவாத எழுத்துக்கள்
வெளிவந்து என்ன சாதிக்கப்போகிறது
உள்ளுக்குள்ளேயே மரித்துப்போகட்டும்
சபிக்கப்பட்டதின் இறுதி விமோசனம்!
கால மாற்றத்தின் பிரிதொரு ஜன்மத்தில்
உணர்வுகள் மேலெழுந்து உயிர்பெற்றெழ
உலகுக்கு சொல்லும் உன்னத செய்தியாக
தன்னைத்தானே முன்னிருத்தி "வாழ்க"என்றது!

வியாழன், ஜனவரி 07, 2016

ஶ்ரீ ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளின் அருள் உரை..


நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை!!
-----------------------------------------------------
உலகில் உள்ள அனைவருக்கும் எதோ ஒரு கடமை இருக்கும்.எதோ ஒரு பொறுப்பும் இருக்கும்.

அது அவர்களது அறியாமையை தவிர வேறில்லை.

எது உங்களது கட்டுப்பாட்டில் உள்ளது சற்றே சிந்தியுங்கள்.

உங்கள் உடலே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே. 

உங்கள் உடம்பே உங்கள் பேச்சை கேட்காதபோது உலகில் வேறு யார் கேட்பார்?

உடலை விடுங்கள். 

உங்கள் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிருவதும், வழுக்கை விழுவதும் யாருக்கத்தான் பிடிக்கும்?

ஆனால் முடி நரைப்பதயோ உதிருவதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!!

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? 

தெரியாது.

உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? 

அதுவாக ஜீரணம் ஆகிறது.

இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?

இல்லையே.

இப்படி உங்களுக்கு சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப்பாட்டிலும்,
உங்களது பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலதையும் உங்கள் பொறுப்பு
என்று நீங்கள் சிந்திப்பது எவ்வளவு அறியாமை.

மழை உங்களைக்கேட்டா வானிலிருந்து பொழிகிறது?

மரம் உங்களைக்கேட்டா முளைகிறது?

உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது?

நக்ஷத்திரங்கள் உங்களின் பொறுப்பிலா ஜொலிக்கிறது?

நீங்கள்தான் வானில் உள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப்பிடிப்பவரோ??

உங்கள் பொறுப்புணர்ச்சியும் கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை?
எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை. எதற்கும் நீங்கள் பொறுப்பும் இல்லை.
அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக்கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை.அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குயறதோ அது அனைத்தையுமே பார்த்துக்கொள்ளும். 

உங்களுக்கு ஏன் வீண் கவலை?
எதுவும் உங்கள் கையில் இல்லை. அமைதியாய் இருங்கள்!!!
நாராயணா
நாராயணா...​

வியாழன், ஜூன் 11, 2015

பூக்கள்!


வண்ண வண்ணமாக
வகை வகையாக!
பார்க்க அலுக்காத
பட்டுப்பூக்கள்!
அசத்தும் அழகு
ஆர்கிட் மலர்களின் அணிவகுப்பு!

சனி, மே 12, 2012

அன்னையர் தின நல் வாழ்த்துகள்!

அன்பில் திளைத்து ஆனந்தம் பெருக
இனிய வாழ்த்துகள்!

என் தோட்டத்து மலர்கள்!

அழகிய ஆர்கிட்!