கோவில்களில் நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றுவதற்கு 1,2,3,.. என்று விரல் விட்டோ அல்லது மனதிற்குள் எண்ணியோ சுற்றாமல் இந்த எளிய வழியை பின்பற்றலாமே..!
1 ஞாயிறே போற்றி
2 திங்களே போற்றி
3 செவ்வாயே போற்றி
4 புதனே போற்றி
5 வியாழனே போற்றி
6 வெள்ளியே போற்றி
7 சனியே போற்றி
8 ராகுவே போற்றி
9 கேதுவே போற்றி.
நவக்கிரகங்களின் நாமங்களை உச்சரித்த மாதிரியும் ஆகும் அல்லவா :)
செய்ய முடியும் என நினைத்தாலும்,செய்ய முடியாது என நினைத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் -ஹென்றி ஃபோர்டு
வியாழன், ஆகஸ்ட் 14, 2008
திங்கள், ஏப்ரல் 28, 2008
தமிழ் படும் பாடு!
நான்கு வருடங்கள் முன்(2004)'மரத்தடி'யில் எழுதியது.
ஒரு மாதம் முன்பு திடீரென்று என் பெண்களிடம்...
'அபி(ராமி)...வித்யா நா "ஜயன்ட்" சூப்பர் மார்க்கெட் போகப்போறேன், வாங்க வேண்டிய சாமான்களை சொல்றேன் ரெண்டு பேரும் எழுதுங்க' என்றேன்.
'என்னம்மா இது நீங்க தானே எழுதுவீங்க இன்னைக்கு ஏன்? அதுவும் நாங்க ரெண்...டு பேரும் எதுக்கு எழுதணும்'? என்றாள் அபி.
'ம்.. யா...லா...' இது வித்யா
'ஆமா நீங்கதான் எழுதணும் அதுவும் நான் எழுதச் சொல்றது தமிழில்' என்றவுடன் அபி
'அய்யோ...! என்னம்மா தமிழ்லேயா?
'ஹையா! நோ ப்ராப்ளம் நான் எழுதிருவேன் சொல்லுங்கம்மா' என ரெடியாக பேப்பர் பேனாவுடன் தயாராகி விட்டாள் வித்யா !
'அம்ம்ம்...மா..' என்ற சிணுங்கிய அபி சரி சரி என்று(நம்மால் எழுதமுடியுமா என்பது போல்) அரை மனதுடன் தயாரானாள்.
அவர்கள் இருவருக்கும் வீட்டில்தான்(ட்யூஷன் வைத்து) தமிழ் சொல்லிக் கொடுத்தோம், அதன் பிறகு வார, மாத தமிழ் இதழ்கள், செய்தித்தாள் இவைகளை சும்மா புரட்டிப் பார்ப்பதோடு சரி அதைப் படிக்க ஆர்வம் காட்டுவதே இல்லை, சொன்னாலும் அப்புறமா படிக்கிறோம் என்று சொல்லி விடுவார்கள்.
அன்று ஏதோ தோன்றியது இவர்களை இப்படியே விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. (அதுவும் மரத்தடிக்கு வந்ததில் இருந்து அதிகமாகி விட்டது. இவர்களுக்கும் தமிழ் தெரிந்திருந்தால் இங்கு அழைத்து வந்திருக்கலாமே ) அதுதான் மேலே குறிப்பிட்டது.
இருவரும் எழுதி முடித்ததும்,அதை வாங்கி படித்துப் பார்த்ததும் முதலில் சிரிப்பு தாங்க முடியவில்லை நான் படித்துக் காட்ட அவர்களும் சேர்ந்து சிரித்து ...
அதன் பின் இவர்களுக்கு இப்படி அருமையான தமிழ் மொழியை ஒழுங்காக எழுத(படிக்க)த் தெரியவில்லையே என ரொம்ப வருத்தப்பட்டாலும், இன்னொருபுறம் பேசவாவது தெரிகிறதே என சிறிது ஆறுதல்.
சரி அன்று அவர்கள் எழுதிய மளிகை சாமான்கள் லிஸ்டை பார்க்கலாமா?
நான் சொன்னது:
பனங்கல்கண்டு, புளுங்கள் அரிசி, உளுந்தம் பருப்பு, காய்கறிகள், உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய், வாழைக்காய், தக்காளி, பயத்தங்காய், அப்பளம், புளி, துவரம் பருப்பு, சமையல் எண்ணை, மிளகாய்த்தூள், ஆட்டா மாவு, கோதுமை மாவு இப்படி விரிந்தது லிஸ்ட்...
அவர்கள் எழுதியது :
அபிராமி: ----------------- வித்யா:
பனங்கள் கன்டு >>> பனங்கல் கன்டு
புலகெல அரிசி >>> பூலுங்கல் அருஸி
உளரந்து பருபு >>> உலுந்த பறுப்பு
கொய்கரி >>>>>>>> கைகரீள
உருல கிளங்கு >>>> உறுலை கிலங்கு
கத்திரிக் காய் >>>>> கத்திரிக்காய்
வென்டை காய் >>>> வேன்டைக்கை
வாளை காய் >>>>>> வலை காய்
தக்காளி >>>>>>>>>> தக்கலி
பைத்தங் காய் >>>>> பய்தங்கை
அப்பளம் >>>>>>>> அப்பலம்
புலி >>>>>>>>>>>>> புலி
துவரம் பருப்பு >>>>> துவரம் பறுப்பு
சமையல் யென்னை >> சமயல் யேன்னை
மிலகாய் துல் >>>>>> மிலகை துள்
ஆடா மாவு >>>>>>> அட்டா மவு
கொதுமை மாபு >>>>> கோதுமை மவு
தெங் காய் பூ >>>>>> தேங்காய் பூ
இது எப்படி இருக்கு! :))
அபியிடம் கேட்டேன் "மாவு என்பதை ஏன் சரியாக எழுதி விட்டு பிறகு இன்னொன்றுக்கு மாபு என்று எழுதினாய்" என அதற்கு அவள் மாவு, மாபு, என்று சொல்லி பார்த்தாளாம் ஒரே குழப்பமாகி விட்டதாம் அதான் இரண்டையுமே எழுதினேன் என்கிறாள்!!!
என்னத்தைச் சொல்ல :-))))))))))
(இது சிரிக்கும் விஷயமல்ல என்றாலும்)இன்னும்கூட அவர்கள் எழுதியதை படித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன் :)
மீனா

செவ்வாய், மார்ச் 11, 2008
இந்த விருது எதிர்பாராதது!
நான் எழுதிய'யாத்தி'என்ற சிறுகதை ஜனவரி 2008 'யுகமாயினி'என்ற மாத இதழில் பிரசுரம் ஆனது,இந்தச்சிறுகதை'இலக்கியச் சிந்தனை'அமைப்பால் அந்த மாதத்தின் சிறந்தசிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
(சிங்கப்பூரின் சிறந்த எழுத்தாளர்)தோழி ஜெயந்திசங்கர் கேட்டுக்கொண்டதற்கிணங்க யாத்தி கதையை சென்னையில் இருந்து வெளியாகும் 'யுகமாயினி' மாத இதழுக்காக அனுப்பி வைத்திருந்தேன்।
இந்தியாவின் இலக்கிய சிந்தனைக்கான இந்த விருது ஏற்கனவே இரண்டு முறை மலேசியாவிற்கு கிடைத்திருக்கிறது.1970ல் மலேசிய நாட்டின் சிறந்த எழுத்தாளர்களான் திரு சி.முத்துசாமி அவர்களுக்கும்,சில வருடங்கள் முன் திருரே.காஅவர்களுக்கும்,மூன்றாவதாக தற்பொழுது என் கதைக்கும்!
எழுத்துலகில் எவ்வளோவோ சிறந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் என் எழுத்திற்கு இப்படியொரு பரிசு!இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை!
யாத்தி கதையை தேர்ந்தெடுத்த இலக்கிய சிந்தனை அமைப்பிற்கும்,திரு சித்தன் அவர்களுக்கும் என்றும் என் நன்றி.
-மீனா

”யாத்தி”
"யாத்தி"
பெரிய வீடு அது. வெளி கேட்டில் இருந்து உள்ளே வந்தால் இரண்டு கார்கள் நிறுத்தும் அளவு நீளமான வாசல்! வரிசை வீடுகளில் கடைசி வீடு. ஆதலால் வீட்டின் வலது பக்கம் சுற்றிலும் பெரியதாக இடம்! தானாக இயங்கும் கருப்பு நிற கேட், அதை ஒட்டி வீட்டின் சுற்று சுவர். கட்டையாக பாசி படிந்த கான்கிரீட் சுவரின் மீது முனைகள் கூறாக வேல் போன்ற வடிவத்தில் கறுப்பு நிறக்கம்பிகள் பொருத்தப் பட்டிருந்தன. அவைகளில் துரு ஏற ஆரம்பித்திருந்தது.
இடது புறம் பக்கத்து வீட்டுக்கும் இந்த வீட்டிற்கும் பொதுவான சுவர்! அதிலும் வலப்பக்கத்தில் உள்ளது போல் கம்பிகள், உள் புறத்தில் சுவரை ஒட்டினாற்போல் வரிசையாக வைக்கப் பட்டிருக்கும் தொட்டிகளில் பல வண்ணங் களில் பொகைன்வில்லா என்னும் காகிதப்பூ செடிகள்! சரியாக தண்ணீர் விடாமல் பூக்களெல்லாம் காய்ந்து கொட்டியபடி! கேட்டின் ஓரத்தில் ரம்புத்தான்மரம் நிறைய பூ காய் பழங்களுடன்! மரத்தை சுற்றிலும் இலைகளும் பூக்களும் பிஞ்சுகளுமாக உதிர்ந்து எங்கு பார்த்தாலும் குப்பையும் கூளமுமாகக் கிடந்தது.
யாத்தி அந்த வீட்டிற்கு வந்தவுடன் அவளின் உழைப்பில் துரு ஏறியிருந்த கம்பிகள் மீண்டும் கறுப்பு வண்ணம் அடிக்கப் பட்டு, பாசி படிந்திருந்த சுவர்கள் வாரம் ஒருமுறை தேய்த்து கழுவப்பட்டு, தினமும் தோட்டம் முழுதும் கூட்டி, செடிகளுக்கு தண்ணீர் விடப்பெற்று, இப்போது புதுப் பொலிவுடன் திகழத் தொடங்கின அந்த வீடும், அதன் சுற்றுப் புறமும்!.
இரண்டரை வருட ஒப்பந்தத்தில் ஏஜென்சி மூலமாக பத்தொன்பது வயது இந்தோனிசிய பணிப்பெண் யாத்தி அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது.
***
வெளியில் துணி காயப்போடுவதற்கென்று கட்டியிருக்கும் கொடியை அழுத்தமாக துடைத்துக் கொண்டிருந்தாள் யாத்தி! பக்கத்தில் துவைத்த துணிகள் கூடைகொள்ளாமல் நிரம்பி வழிந்தது! கயிற்றில் தூசி ஒட்டியிருந்தால்? துணி அழுக்காகி விடுமே... அதனால் தினமும் அதை துடைத்த பிறகே காயப்போட வேண்டும் என்பது லிசாவின் கட்டளை.
ரம்புத்தான் மரத்தில் காய்கள் எல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் மாறி விட்டிருந்தது!. இன்னும் சில தினங்களில் முழுக்க பழுத்துவிட்டால்! மரத்தின் கிளைகள் முழுதும் கைக்கெட்டும் தூரத்தில் கூட!(முட்டை யின் வடிவத்தில் எலுமிச்சை அளவில் மேல் தோலில் மொசு மொசு வென்று அதன்முடி(!)யுடன்) கொத்து கொத்தாய் பழுத்து தொங்கும் பழங்களின் ரத்த சிவப்பு நிறமும், இலைகளின் ஆழ்ந்த பச்சை நிறமும் தெருவில் போகிறவர்களின் கண்ணைப்பறிக்கும்!. இதை ஒரு நாளாவது ரசித்திருப்பாளா இந்த லிசா.
கேட்டின் அருகே வெளிர் சந்தன நிறத்தில் (ஷாட்ஸ்)ட்ரவுசரும் வெள்ளை நிறத்தில் மேல் சட்டையும் அணிந்து சாப்பிடவே மாட்டாளோ என்பது போல் ஒல்லி குச்சியாக சிரிப்பை மறந்த முகத்துடன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு என்னடா தவறு கண்டு பிடிப்போம் என்று உன்னிப்பாய் யாத்தி துடைப்பதையே கவனித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இதையெல்லாம் ரசிக்க எங்கே நேரமிருக்கிறது?.
எதிர் வீட்டில் குடி இருப்பவள், லிசா யாத்தியை படுத்தும் பாட்டை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இன்றும் அதே காட்சி! இப்படி எங்கேயாவது கொடியையெல்லாம் துடைத்து கிட்டு இருப்பாங்களா? என்ன கிறுக்கோ இவளுக்கு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்! லிசாவிற்கு இவர்களோடெல்லாம் பழகுவதற்கே நேரமில்லை.
எத்தனையோ வருடங்களாக அங்கு வசிக்கிறார்கள் என்றாலும் இது நாள் வரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாருடனும் பழக்கம் இல்லை அவளுக்கு. அப்படியே எப்போதாவது நேருக்கு நேர் பார்க்கும்படி வந்தாலும் அவர்கள் சிநேக பூர்வமாய் சிரிக்க, இவளோ அதை கவனிக்கவே மாட்டாள். அடுத்த முறை அவர்கள் இவளை கண்டும் காணாத மாதிரி போய் விடுவார்கள்.
***
ரொம்ப நேரமாக அழைப்பு மணியை அழுத்திய தண்ணீருக்கான மீட்டர் பார்க்க வந்த ஆள், சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு பிறகு உத்தேசமாக ஒரு தொகையை எழுதி சுவரில் பதித்திருந்த மெயில் பாக்ஸில் போட்டு சென்று விட்டான்.
அழைப்பு மணியின் சத்தம் உள்ளே அயன் செய்து கொண்டிருந்த யாத்திக்கு கேட்டு அவசரமாக வெளியே வருவதற்குள் அவன் அடுத்த வீட்டிற்குள் நுழைந்திருந்தான்! குளித்துக் கொண்டிருக்கும் எஜமானி லிசாவிற்கு தெரிந்தால்? அப்போதே பயம் அவளை கவ்விக் கொண்டது!
அவன் போட்டு விட்டு போயிருந்த பில்லை எடுத்து கொண்டு திரும்பியவளின் பார்வை கேட்டிற்கு வெளியே குப்பை லோரி வந்து சென்றதற்கான அடையாளமாக காலியான குப்பை தொட்டி ஒரு பக்கமும் மூடி ஒரு பக்கமுமாக கிடப்பதை கவனித்ததும் நல்ல வேளை மேம் பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டவளாக பர பரவென்று வெளியில் போய் அதை சரி செய்து விட்டு உள்ளே வந்தாள்..
அப்போதுதான் நினைவு வந்தது 'அய்யோ..அயன்...!'அவசரத்தில் மின்சார இணைப்பை துண்டிக்காமல் அப்படியே வைத்து வந்தது நினைவிற்கு வர தலை தெறிக்க ஓடினாள், அதற்குள் பாதி அயன் செய்த நிலையில் லிசாவோட சட்டையின் மார்பு பகுதித் துணி எரிந்து சுருங்கி விட்டிருந்தது. அந்த நிமிடத்தில் உடல் முழுக்க அச்சம் பரவ சட்டையை கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருந்த போது 'ஏய் காலிங் பெல் சத்தம் கேட்டதே யார்'? கேட்டபடி அங்கு வந்த லிசா..
பேயரைந்தவள் போல நிற்கும் யாத்தியைப் பார்த்ததும் 'என்னாச்சு'? கேட்டவளின் பார்வை யாத்தியின் கையில் எரிந்து சுருங்கிய நிலையில் இருந்த சட்டையின் மேல் பட்டது..
பதட்டத்துடன் சட்டையை பறித்து பிரித்து பார்த்த லிசா கோபமாக அதை யாத்தியின் முகத்தில் வீசி எரிந்து விட்டு யாத்தியின் முதுகில் ஓங்கி ஓர் அடி வைத்தாள்.நிலை தடுமாறி விழப்போனவளை பிடித்து பக்கத்தில் இருந்த அந்த சூடான அயன்பாக்ஸை எடுத்து "புது... சட்டை அதற்குள் எரித்து விட்டாயே இனிமேல் இப்படி செய்வியா...?" என்று சொல்லிக் கொண்டே "மே..ம் வேண்டாம் மே..ம்... இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் விட்டு விடுங்கள்" என்று யாத்தி கதற கதற அவளின் சட்டையின் மேல் மார்பு பகுதியில் வைத்து.. அழுத்தினாள்.தோல் பொசுங்கி... வலி தாளாமல் மார்பை பிடித்தபடி அந்த பெண் துடிக்க துடிக்க சூடு வைத்த திருப்தியில் ஏனென்று கேட்காமல் போயே போய் விட்டாள்.
அன்று இரவும் அடுத்தடுத்த நாட்களிலும் எரிச்சல், வேதனை தாள முடியாமல் அதோடு சற்றும் ஓய்வில்லாமல் வேலைகளையும் பார்த்துக் கொண்டு யாத்தி பட்டிருக்கும் பாடு...
இன்று அந்த சின்னப்பெண்ணின் மார்புப்பகுதி சுருங்கி மாட்டுக்கு சூடு வைப்பது போல் என்றுமே அழியாத வடுவாக அயன் பாக்ஸின் அடையாளம்..
லிசாவின் இந்த கொடுமைகளை யாரிடமும் சொல்வதற்கோ எதிர்ப்பதற்கோ வழியு மில்லை, தைரியமுமில்லை யாத்திக்கு. லிசாவின் கணவனோ பிஸினெஸ் விஷயமாக பாதி நாள் வீட்டில் இருப்பதில்லை.அப்படியே இருந்தாலும் இதையெல்லாம் அவன் கண்டு கொள்வதே இல்லை. மேலும் அவனும் நல்லவனல்ல ஆத்திரம் வரும் சமயத்தில்அவனும் இவளை அடிப்பவன்தான் அவனிடம் எப்படி இரக்கத்தை எதிர்பார்க்க முடியும் இவள்?.
இந்தோனிசியாவில் இருக்கும் அம்மா, அப்பா, சகோதரியுடன் தொலைபேசி வழி பேசவும் முடியாது அதையும் எஜமானி பூட்டி வைத்துவிட்டாள்.கடிதம் எழுதலாம் என்றால் அதையும் படித்து விட்டுத்தான் அனுப்புவாள். அதனால் இரண்டு வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் வேலை செய்யும் இந்தோனிசிய பெண்ணிடம் கடிதம் கொடுத்தனுப்பியதை லிசா கண்டு பிடித்ததில் இருந்து அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது.
லிசா தினமும் யாத்தியுடன் சண்டையிட்டு கத்துவது அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு காலையிலேயே ஆரம்பித்து விட்டாளா என்று எரிச்சல் படும் அளவிற்கு போய் விட்டது.
பல தடவை யாத்தி அழுது கொண்டே எஜமானிக்கு பதில் சொல்வது கூட கேட்கும்! லிசாவின் குணம் அறிந்திருந்த அவர்கள் வீட்டிற்குள் நடக்கும் கொடுமை தெரியாம லேயே வெளியில் நடப்பதை வைத்து அதற்கே பாவம் அந்த பெண் இவளிடம் வந்து மாட்டிக்கொண்டது என்று நினைத்துக் கொண்டார்கள்.முழுதும் தெரிந்தால் இந்த இரக்கமில்லாதவளிடம் இருந்து யாத்தியை யாராவது காப்பாற்றி இருப்பார்களோ இல்லை நமக்கேன் வம்பு என்று இருந்திருப்பார்களா?
யாத்தியும் அந்த வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் மீதம் இருக்கும் ஆறு மாதங்கள் எப்போது முடியும், அது வரை எப்படி சமாளிக்க போகி றோம் என இவளிடம் இருந்து விடுதலை கிடைக்கப் போகும் அந்த நாட்களை எண்ணி ஏங்கி கொண்டிருந்தாள.
***
டைனிங் டேபிளின் முன்னே அமர்ந்திருந்தான் ஜோ. அவன் கையில் இருந்த க்ளாஸில் கலங்கலான நிறத்தில் தண்ணீ ர். அதை குடித்தவன் கோபத்துடன் கிளாஸை நங்கென்று மேஜை மேல் வைத்தான். இயல்பான சுவை மாறி அலண்டு கிடந்த தண்ணீர்தான் அவனின் அந்த கோபத்திற்கு காரணம்.
"வர வர ஒரு வாய் தண்ணி கூட குடிக்க முடியலை கவனின்னு எத்தனை தடவை சொல்லிட்டேன்!!"
"ஏ, லீஸா!..ரொம்பவும் விலையுயர்ந்த ஃபில்ட்டர்ன்னுதானே இதை மாட்டணும்னு சொன்னே? என்ன ஃபில்ட்டர் இது?" வாங்கினதிலிருந்தே கழுவலியா? இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை சுத்தம் செய்யணும்னு வேலைக்காரிகிட்ட சொல்லி இருக்கியா.. இல்லையா?"என்று சத்தம் போட்டவன் "ச்சேய்..." என்றபடி அவன் அமர்ந்திருந்த நாற்காலியை பின்புறமாக சர்ரென்று சத்தத்துடன் தள்ளிவிட்டு எழுந்து போய் விட்டான்.
கணவனுக்குப் பதில் சொல்லாமல்.. விடு விடுவென்று சமையலறைக்குள் வந்த லிசா அங்கே ஏதோ கழுவிக் கொண்டிருந்த யாத்தியின் தலையில் ஓங்கி குட்ட,வலி தாளாமல் "அல்..லமா" என்றபடி சோப் நுறையோடு கையைக் கழுவக்கூட தோன்றாமல் தலையை பிடித்தபடி திரும்பியவளிடம் "சொல்ல சொல்லக் கேட்காமல் என்ன செய்கிறாய் ? நேத்தே சொன்னேன் இல்ல ஃபில்டரை சுத்தம் செய் என்று" செய்தியா இல்லையா"?
"யா மேம்," என்று கண்ணீருடன் தலையை ஆட்டினாள் யாத்தி. யாத்திக்கு இதெல்லாம் பழகிவிட்டது என்றாலும் லிசா தலையில் குட்டும் போது, முகத்தில் அறையும்போது, கையில் என்ன கிடைத்தாலும் அதைக் கொண்டு தாக்கும் போது ஏற்படும் வலியின் வேதனையை லிசாவின் மிரட்டலுக்கு பயந்து அடக்க நினைத்தாலும் அவளையும் மீறி வலி தாங்க முடியாமல் அவ்வப்போது இப்படி கண்ணீர் வந்து விடும்.
"எல்லாத்துக்கும் அழுதின்னா இன்னும் குட்டுவேன். நிறுத்து உன் அழுகையை முதல்ல" என்று லிசா கையை ஓங்க, எங்கே மறுபடி குட்டுவாளோ என்ற பயத்தில் சட்டென்று தலையில் இருந்த கையை எடுத்து கண்ணை துடைத்து பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டாள் யாத்தி.
"பொய் சொல்லாதே. நான் பாக்கணும் எப்படித்தான் சுத்தம் பண்ணியிருக்கே ன்னு இப்பவே திற" என்று கோபமாகக் கத்தினாள்.
யாத்தியின் முகம் பயத்தில் வெளிறியது. அதை அவள் கவனிப்பதற்குள் பள்ளிக்கு கிளம்பிய அவளின் மகன் சாம்,"மா........ம்!! எனக்கு நேரமாச்சு....வறீங்களா இல்லையா?" என்று அவசர படுத்த "இதோ வரேன்.." என்றபடி வேறு வழியில்லாமல்"இரு.. இரு....உன்னை திரும்பி வந்து பாத்துக்கறேன்" என்பது போல் கண்ணாலேயே யாத்தியை மிரட்டி விட்டு வெளியே விரைந்தாள் லிசா.
"மாதம் ஒருதடவை ஃஃபில்ட்டரைக் கழட்டி சுத்தம் செய்யணும். இந்த 'முட்டாள்' யாத்தி கழுவாம இருந்துட்டாளோ? ஒருவாரமோ இரண்டு வாரமோ நல்லாருக்கு. மீண்டும் அதே கலங்கள். அதே வாடை. இவ ஒழுங்கா கழுவலை அதுதான் வரட்டும். போற வழியெல்லாம் அதே எண்ணம்தான்.வேலைக்கார பெண்ணை நினைக்கும் போதே புசு புசு வென்று ஆத்திரம் பொங்கியது லிசாவுக்குள்.
மகனை பள்ளியில் விட்டு திரும்பியவள் வீட்டருகே வந்ததும் தன்னிடமிருந்த தானாக இயங்கும் விசையை தட்டி கதவை திறந்து காரை உள்ளே செலுத்தி நிறுத்திய வேகத்தில் "யாத்தீஈஈஈ.." என கத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.
எந்த பதிலும் வராதது கண்டு மேலும் ஆத்திரத்தோடு நேராக சமையல் கட்டிற்கு சென்றாள் அங்கு யாத்தியை காணோம்! சாமான்கள் கழுவியது போக மீதம் சோப் போட்டபடி, வெளியில் துவைக்கும் மிஷினில் இருந்து எடுத்த துணிகள் இன்னும் காயப்போடாமல்ஸ. "ஏய் யாத் தீ..." என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டின் எல்லா இடமும் பார்த்து தேடி கொண்டே வர அப்போது தான் அவளுக்கு உணர்த்தியது வீட்டில் நிலவிய அமைதி! பகீரென்றது அவளுக்குள்! அங்குமிங்கும் ஓடினாள்.
யாத்தியை எங்கும் காணவில்லை. தொலைபேசியில் ஜோவை தொடர்பு கொண்டு உடனே அவனை வரச்சொல்லி விட்டு பதட்டத்தோடு காத்திருந்தாள்.
***
அழுது கொண்டே இருந்தாள் யாத்தி! ஊரின் மையப்பகுதியில் எங்கு போவது என்று தெரியாமல் சுற்றித்திரிந்தவளை போலீஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.
இரண்டு வருடங்களாக அடிபட்டு அடிபட்டு ஏற்கனவே உருக்குலைந்திருந்த அவள் முகம், அழுததில் மேலும் வீங்கி விகாரமாய் இருந்தது. தலை முதல் கால்வரை உடம்பெல்லாம் காயங்கள்!!.
அவளை விசாரித்த போது எஜமானி என்னை அடித்து சூடு வைத்து சித்தரவதை படுத்தினாள். எஜமானரோ அவர்களின் வயது வந்த பையனின் முன் என்னை அடித்து அவமான படுத்துவார் "அவர்களை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன். இதை விட்டால் எனக்கு வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன்." இது தெரிந்தால் எஜமானி என்னை என்ன வேண்டுமானாலும் செய்வாள் அதற்கு பயந்துதான் வீட்டை விட்டு ஓடிவந்தேன். எனக்கு எதுவும் வேண்டாம் தயவு செய்து என்னை என் பெற்றோரிடம் சேர்த்து விடுங்கள், என்ற அவளை பார்ப்பதற்கே பரிதாபமாயிருந்தது.
***
பலவிதமான சந்தேகங்கள் திடீரென்று எங்கே போயிருப்பாள்? எப்படி போனாள்? முன்பக்கமும் பின்பக்கமும் கதவு பூட்டியபடி இருக்கிறது அப்புறம் எப்படி? பின்புறம் சென்று பார்த்தாள் தோட்டத்தின் மூலையில் ஒரு ஸ்டூல்! அருகே சென்று பார்க்கும் போதுதான் தெரிந்தது அதில் ஏறி குதித்து ஓடியிருக்கிறாள் என்று. பின்பக்கம் உள்ள வீட்டில் யாரும் புழக்கம் இல்லை குதித்து ஓடும்போது யாரும் இவளை பார்த்திருக்க முடியாது. அப்படியே பக்கத்து வீடுகளில் யாரும் பார்த்திருந்தாலும் அதை இவளிடம் சொல்லமாட்டார்கள் என்பது இவளுக்கு தெரியாது!.
ஏதோ சந்தேகம் வர ஃபில்டரை திறந்துதான் பார்ப்போமே என்று அதன் மேலே இருந்த ஸ்குரூவைக் கழட்டி. மேல் மூடியை நீக்கினாள். உள்ளே சுற்றிலும் மெல்லிய வடி கட்டி போல அமைக்கப்பட்டு அதன் நடுவில் தண்ணீர் ஊற்றுவதற்கென்று கொஞ்சம் பெரிய குவளை ஒன்று மூடியுடன் இருக்கும்.அதைத் திறந்து மெதுவாக உள்ளே எட்டி பார்த்தவள் அதிர்ச்சியில்...
"ஓ....மை காட்.."!! இரு கைகளாலும் வாயைப் பொத்தி கொண்டு செய்வதறியாது அப்படியே சரிந்து விட்டாள்!.
அவசர அவசரமாக தனது விலையுயர்ந்த காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு உள்ளே ஓடினான் ஜோ!
"லீ....சா... லீ...சா.....
கூப்பிட்டுக் கொண்டே பின்புறம் ஓடினான் குளியலைறையில் இருந்து சத்தம் வர அங்கு போய் பார்க்கும் போது உமட்டி உமட்டி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் லிசா.... இவனுக்கு ஒன்றும் புரியவில்லை..
"லிசா என்ன நடந்தது? நிஜமாகவே ஓடிப்போயிட்டாளா அந்த கழுதை? சொல் என்ன நடந்தது?"
திரும்ப திரும்ப அவன் கேட்க இவளால் பதில் சொல்ல முடியவில்லை தடுமாறியபடி ஃபில்டரை நோக்கி கையை காண்பித்தாள் அதை எட்டிப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.....!!
உள்ளே!!
'குப்..!பென்று முகத்தில் அறைந்த துர்வாடையுடன் கறுஞ்சிவப்பு நிறத்தில் மிதந்து கொண்டிருந்தது "சானிடரி நேப்கின்" ஒன்று!!
-மீனாமுத்து

திங்கள், டிசம்பர் 10, 2007
மலைக்கோட்டை
என்னவோ இப்போதெல்லாம் ஒண்ணுமே எழுத தோணலை. தோணலைன்னு சொல்லிகிட்டே தோணறதை எழுதலாம்னு...
ஒரு வாரமா தொண்டை வலி,வரட்டு இருமல் இப்படி ஒரேயடியா படுத்துது.விடாத மழை காரணமா இல்ல யாருகிட்டெ இருந்தாவது ஒட்டிகிச்சா தெரியலை.
எது எப்டி இருந்தாலும் அதோடே ஒரு வாரமா வீட்லயும் வெளியிலெயுமா ஒரே விருந்துதான்!இன்னைக்கு எல்லோரும் அங்கயும் இங்கயுமா சென்றதும் வீடு வெறிச்சென்று அமைதியா இருக்கு.
எழுத வேண்டியதெல்லாம் அப்படியே கிடக்குது நேத்து மதிய சாப்பாடுக்கப் புறம் போரடிச்சுப்போயி டிவியை தட்டினா அப்பத்தான் சரியா 'வெள்ளித்திரை' யில் ஆரம்பிச்சிருந்திருந்தது விஷால் நடிச்ச'மலைக்கோட்டை' என்ன்ன்ன படம்மப்பா இப்பல்லாம்! நாயகன் பஸ்ல போயி கிட்டுருக்கானாம் அது ஒரு இடத்துல போக்குவரத்து நெரிசல்ல மாட்டி கிட்டு அப்படியே நின்னுடுதாம் அந்த இடத்துல ரோட்டோரத்துல ஒரு வீடாம் அந்த நேரம் பாத்து தேவதை போன்ற பெண்ணொருத்தி அந்த மொட்டை மாடிக்கு வந்து காக்காக்கு(அதோடு கொஞ்சி கொஞ்சிப்பேசிகிட்டு )சோறு வக்கிறாளாம் நம்ப நாயகன் அதைப்பாத்து அப்படியே மயங்கி... (அட பொங்கப்பா...)அடடா டா டா டா.. இப்படியே இப்படியே... என்ன கதை! என்ன கதை!! நான் ஒண்ணும் சொல்ல்லல்லப்பா...

சனி, அக்டோபர் 06, 2007
வறட்டி தட்டிய கதை!
எனக்கு திருமணம் ஆன புதிது!
எங்கள் வீட்டில் மூன்று பசுக்கள், இரண்டு கன்னுகுட்டிகள் இரண்டு ஜோடி காளை மாடுகள் இருந்தன. பெரீய மாட்டுக் கொட்டகை.
தினமும் காலையில் கன்னுவிட வரும் காளியண்ணன் வந்து கன்னு குட்டிகளையும் சிறிது நேரம் அதன் அம்மாக்களிடம் அவிழ்த்து விட்டு அதன் பிறகு பால் கறந்து வைத்து விட்டு போய் விடுவார்.அதன் பிறகு வேலை செய்யும் பெண் வந்து கன்னு குட்டிகளையும் பசுக்களையும் பிடித்து கட்டி விட்டு (காளை மாடுகள் காலையிலேயே அதுகளின்(ஆபீஸ்!) வேலைகளை பார்ப்பதற்கு வயலுக்கு போய்விடும்) மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்ய ஆரம்பிப்பாள்.
காய்ந்த சாணிகளையெல்லாம் அள்ளி வயலுக்கு எடுத்து போகும் குப்பையில் கொட்டி விட்டு மற்றவைகளை அள்ளி வந்து அதற்கான பத்தியில் கொட்டுவாள் பிறகு வாளியில் தண்ணி எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சாணியில் ஊற்றி சேர்த்து வெகு லாவகமாக விளாம்பள அளவு உருண்டைகளாக வெகு லாவகமாக(!) கையை திருப்பி திருப்பி சாணியை உருட்டி(அப்போது வரும் டப் டப்பென்று சத்தம் ஏதோ பாட்டுக்கு தாளம் போடுவது போல்! ) உருட்டி ஒரு அகலமான ஏந்தினால் போன்ற கூடையில் நெல்லு உமியில் போட்டு உருட்டி உருட்டி அதே போன்ற இன்னொரு கூடையில்(அவையெல்லாம் இப்போது வெறுமனே உபயோகமில்லாமல் கிடக்கிறது) போட்டு மொத்தமாக பத்தியின் இந்த கடைசியில் கொண்டு வந்து அழகா நேருக்கு நேரா ஒரு வரிசைக்கு ஏழு ஆக 20 ,25 வரிசை தட்டி விடுவாள்! வரிசை எந்த பக்கம் இருந்து பாத்தாலும் அழகா இருக்கும்! தினமும் அவள் இதையெல்லாம் செய்யும் நேர்த்தியை அதிசயமா பார்த்து ரசிப்பேன்!
மாட்டிக் கொண்டேன் ஒரு நாள்... !
நான்கு நாட்கள் சேர்ந்தார்ப்போல அந்த பெண் என்ன காரணமோ என்னவோ வராமல் இருந்து விட்டாள். பார்த்தார்கள் என் மாமியார் இனி சுத்தம் செய்யாமல் இருக்க முடியாது என்று அவர்களே ஆரம்பித்து விட்டார்கள் அந்த வேலையை! அப்போது மாமியார் என்ன வேலை செய்தாலும் கூட மாட செய்யணும் இல்லையென்றால் எல்லாவற்றையும் இழுத்து போட்டு நாமே செய்யணும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்க பட்டிருந்தது! எல்லாம் அவங்க கிட்ட நல்ல பேர் எடுக்கத்தான்(நல்லபேர் எனக்குமட்டுமில்லே எங்கம்மாக்கும்! நல்லா வளர்த்திருக்காங்கன்னு:))
அடுத்த இரண்டு நாட்களும் என் மாமியார்தான் செய்தார்கள்.அவங்க மாட்டு கொட்டகை மட்டும் சுத்தம் செய்திருந்தால் பரவாயில்லை.. வரட்டியும்ல தட்டினாங்க! அதான் அதான் எனக்கு என்ன செய்றதுண்ணு தெரியலை இரண்டு நாளும் கப் சிப்பென்று கண்டுக்காம இருந்திட்டேன் அப்புறம் மூணாவது நாள் பாருங்க.....
அன்னைக்குன்னு பாத்து பக்கத்து வீட்டுக்காரம்மா வந்தவங்க சும்மா இருக்கக்கூடாதா 'என்னதுது வேலை செய்யும் பெண் வரலைன்னா வேற யாரையும் செய்ய சொல்லக் கூடாதா வேகாத வெயில நீங்க ஏன் செய்யணும்'? ங்க அவ்வளுவுதான் யாராவது கேக்க மாட்டாங்களாண்ணு இருந்தவங்களு க்கு தோதாப்போச்சு 'ஆமா இங்க யாரு செய்ரம்கிறா நாந்தான் செய்யணும் இதெல்லாம் செய்றதுக்கு வேற யாரு இருக்கா? நம்மவுட்டு பொண்ணா இருந்தா செய்யுங்க மத்தவங்கள்ளாம் செய்வாங்களா' என்று பொறும ஆரம்பிச்சிட்டாங்க.
அவங்க என்னைத்தான் சொல்றாங்கன்னு நல்லாவே தெரிஞ்சது, அவ்வளவுதான் தப்பு செய்திட்டமோன்னு பயந்தே போயிட்டேன், இவரும் அங்கு இல்லை தொலை தூரத்தில் படிச்சிட்டிருந்தார் (அய்யோ பாவம் சின்னபொண்ணு நானு:( :) ஆறுதலுக்கு யாரும் இல்லை ராத்திரியெல்லாம் தூக்கமே வரலை.
அடுத்த நாளும் அந்த பெண் வரலை. பார்த்தேன் என்ன ஆனாலும் பரவாயில்லை நாமளே களத்துல இறங்கிடுவோம்ணு காலையிலேயே பெரிய தட புடலா கூடையென்ன விளக்குமாறு என்னன்னு எடுத்துகிட்டு புடவையை ஒரு பக்கமா இடுப்பில சொருகி கிட்டு மாட்டுக் கொட்டகைக்கு போனதை எதிர வந்த காளியண்ணன்"என்னா ஆச்சி பண்ணப் போறிய?பெரியாச்சி எங்க'?ன்னு கேட்டுகிட்டே ஒரு மாதிரி என்னை பாத்து கிட்டே உள்ள போனாரு.
அங்க மாட்டுகொட்டகையில பாத்தா...வண்டி வண்டியா சாணி! 'சே என்ன மாடுங்க இதெல்லாம் இவ்வளவு சாணியா போடுங்க என்று மனதுகுள்ள நொந்துகிட்டே எப்படி எடுக்கிறதுண்ணு யோசிச்சு அங்கே கீழே ஒடஞ்சு கிடந்த ஓ(ட்)டை எடுத்துகிட்டு அதனாலே சாணிய எடுக்க பாத்தா ம்ஹூம்.. அது எங்கே எடுக்கவா வந்துச்சு! சாணி கிட்ட ஓட்ட வச்சு கரண்டியால எடுக்கற மாதிரி எடுத்தா எடுக்க எடுக்க அது தள்ளி கிட்டே போகுது! பின்னாடியே நானும்...! கடைசியிலே சுத்து சுவர் கிட்டே வந்துதான் நின்னுச்சு! !அப்பாட எடுத்துட்டேன்! கொஞ்ச தூ..ரத்துல இருக்கு அந்த சுவர், ஓவ்வொரு தடவையும் அந்த ஓரத்துக்கு கொண்டு போய் எடுக்கறதுண்ணா எப்படி?
இப்படியே கொஞ்ச நேரம் அவஸ்தை பட்டுட்டு இப்படி சுவரை தேடி ஓடிட்டு இருந்தா இரண்டு நாளாகும் எடுத்து முடிக்க! இது ஆகாதுன்னுட்டு ஒரு வழியா (கைக்கும், மனசுக்கும் சங்கடப்படக்கூடாது இதெல்லாம் புனிதமானது என்று பலவிதமா எடுத்து சொல்லி ) கொஞ்சம் கொஞ்சமா கூடையில நிரப்பி (இந்த மாடு வேற என்னாட்டமா நா அதைப் பாக்குற மாதிரியே ஓரக்கண்ணால என்னை பாத்துட்டே இருந்துச்சு! அது வேற பயம்!) உள்ள கொண்டு வந்து கொட்டி ஒரு தடவைக்கு ஒருக்கா கையை கழுவி காலை கழுவி சிலிப்பர் எல்லாம் மிதித்து ஒவ்வொரு தடவையும் அதை வேறு கழுவி இதெல்லாம் செஞ்சு முடிக்கிறதுக்கே யப்பா போதும் போதும்னு ஆகிடுச்சு!.
அதுக்கப்புறமா அதை கூட்டி பெருக்கி! அவ்வ்வ்வளவு நேரம் ஆச்சு! இப்ப பாக்கணுமே ஆஹா! மாட்டுக் கொட்டாய் சும்மா பள பளண்ணு! என்ன இருந்தாலும் எங்க மாமியாருக்கு இப்படியெல்லாம் பளிச்சின்னு செய்ய தெரியலை!.
அப்புறம்தான் கதை! கொட்டிவைத்துள்ள சாணியை எல்லாம் தண்ணி ஊத்தி பிசையணுமே? தலையை சாச்சி அடுப்படி பக்கம் எட்டி பாத்தேன் ஏதோ எங்க மாமியார் இப்பவாவது வந்து பரவாயில்லை நீ எந்திரி இனி நான் செய்றேன் னு சொல்வாங்களாக்கும்னு.. அவங்க ஆளையே காணும், வெயிலு வேற மண்டைய பொளக்குது.. என்ன பன்றது சாணியை குச்சி கம்பு அது இதுன்னு என்னல்லாமோ வச்சு கலக்கப் பாக்குறேன் ஒண்ணும் முடியலை சரின்னு தண்ணி உமியெல்லாம் போட்டு கையாலேயே பிசைந்து(அந்த பெண் செய்தது கண் முன் தெரிய) பந்து விளையாடுவது போல தூக்கி போட்டு பிடிக்க குந்தியிருந்த என் மடியில சாணி உருணடை விழ 'போச்! அப்பத்தானா
தலை, மூக்கு, காது எல்லாம் ஒட்டு மொத்தமா மாத்தி மாத்தி அரிக்கணும்! வாளிக்குள்ள இருந்த தண்ணீல கைய கழுவி கழுவி அது சாணியா தண்ணியான்னு தெரியாம உருமாறி! நானும்தான்! எப்படியோ வெற்றிகரமா வரட்டி தட்டி முடிச்சேன்! .
அன்னைக்கி தட்டின வரட்டி முழுக்க( சன் டிவியில'அன்புடன்' புரோகிராமில் கடைசில விருந்தாளிங்களை கை முத்திரை பதிக்க சொல்வாங்களே கௌதமி! )அப்படி அச்செடுத்த மாதிரி என் கை முத்திரை! தமாஷா இருந்துச்சு!
ஆனா மாமியாரோ நா வறட்டி தட்டிருக்க அழக பாத்து.. “இப்படியா தட்டுவாக என்ன இருந்தாலும்......' யாரிடமோ என்னை பாராட்டிட்டிட்டு இருந்தாங்க :(
ஆனாலும் உள்ளூர மாமியாருக்கு ஒரே சந்தோஷம்! (அது போதுமே :)
அதுக்கப்புறம் நாலைந்து நாட்கள் அந்த கம கம வாசத்தோடதான் சுத்திட்டு இருந்தேன் :)))
அன்னைக்கு பாதி வறட்டி தட்டிகிட்டு இருந்தப்போ என் தாய்விட்டு உறவினர் வர,நான் இருந்த கோலத்தைப் பாத்து "என்னடி தினமும் நீதானா இதெல்லாம் செய்வாய்?"(கண்டதே காட்சி... :) நான் என்ன மறுத்தும் அப்படியே எங்கம்மா கிட்ட போய் சொல்ல ..
“எம்பொண்ண எப்படியெல்லாம் வளத்தேன்... அப்டி இப்டின்னு......
மத்தவங்க கிட்ட சொல்லி மூக்கை சிந்த அது எங்கெல்லாமோ சுத்தி எங்கல்லாம் போனேனோ அங்கெல்லாம் என்கிட்ட துக்கம் விசாரிக்கிற மாதிரி எல்லோரும் கேட்க இப்படியாக ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சு நான் வறட்டி தட்டுன கதை! :))

செவ்வாய், மே 30, 2006
'கீத கோவிந்தம்'
திரு நா.கண்ணன் அவர்களின் கவிதையே..பாடலாக!(ஆர்.எஸ்.மணி அவர்களின் குரலில் அவரே இசையமைத்தது!)
இங்கே: http://www.rsmani.com/gita_govindam/
கேட்டுப்பாருங்கள் உள்ளம் உருகும்! நான் மிகவும் ரசித்தது நீங்களும் ரசிக்க.
காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக
காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக
தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ....தெல்லாம்
தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ...தெல்லாம்
நீ வருவாயென்று
நானறிவேனதனால்
தினம் தினம் மணியோசை
கேட்டிட மனம் நாடி
வீற்றிருப்பேன் வாயில் முன்னே கண்ணா
வீற்றிருப்பேன் வாயில் முன்னே
காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக
செம்பவழ மாலையிலே
வைத்த கரு முத்தினைபோல்
செம்மை நிற மாலை நேரம்
உன்னுருவம் தோன்றும் வரை
தாயினது கழுத்தினிலே
ஆடும் மணியோசை கேட்க
கொட்டிலிலே துடித்திருக்கும்
சின்னஞ் சிறு கன்றினைப் போல்
காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக
காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக
நா.கண்ணன்

திங்கள், மே 29, 2006
'காத்திருப்பு'
காத்திருத்தல்
எதற்கென்று தெரியவில்லை
காத்திருக்கிறேன்
காத்திருத்தல்
வீணானது
தெரியுமா?
ஏன் இன்னும்
காத்திருக்கிறேன்?
காத்திருத்தல்
சுகமோ?
தெரியவில்லை
காத்திருக்கிறேன்.
இப்படித்தான்
சில பொழுதுகளில்
எங்கேயோ
காணாமல் போய்
எனக்காக
நானே காத்திருப்பேன்
மீனா.
எதற்கென்று தெரியவில்லை
காத்திருக்கிறேன்
காத்திருத்தல்
வீணானது
தெரியுமா?
ஏன் இன்னும்
காத்திருக்கிறேன்?
காத்திருத்தல்
சுகமோ?
தெரியவில்லை
காத்திருக்கிறேன்.
இப்படித்தான்
சில பொழுதுகளில்
எங்கேயோ
காணாமல் போய்
எனக்காக
நானே காத்திருப்பேன்
மீனா.
ஞாயிறு, மே 14, 2006
"ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி"
நவராத்திரி நாயகி:

அன்னையர்களுக்கெல்லாம் அன்னையான அவளை நினைத்து...
எங்களின் வீட்டிற்கு அருகில் குடி கொண்டிருப்பவள் பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.
'ஆயிரம் நாமத்தால் அர்ச்சனை செய்தாலும்
அன்னை உந்தன் பெருமை சொல்லத்தரமோ
ஆயுளும் யோகமும் ஐஸ்வர்யம் யாவும் உன்
அன்பினால் கடைக்கண் பொழி அருளே - திருவே..
ஸ்ராவண பௌர்ணமி முன் சுக்கிரவாரத்தில்
சௌந்தர்யவதி உன்னை ஸ்ரத்தையாய் பூஜிக்க
தேவாதி தேவரும் தேடி வருவார் தேவி
உந்தன் திருவருளை நாடி வருவார்
ஸர்வா பரணமொடு காஷி தருவாய்
மன ஸஞ்சலங்கள் துடைத்து ஆட்சி புரிவாய் - திருவே செந்திருவே..'
பீம்ப்ளாஸ் ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் பாடும் பொழுதெல்லாம் குளமான கண்களுக்குள் ராஜேஸ்வரி அமர்ந்திருப்பாள்!
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம் சிறிய குன்று(மலை)மேல், ஆற்றின் கரையோரம் அற்புதமான அழகுடன் இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது.
இங்கு வருடம்தோறும் நவராத்திரி கொண்டாட்டம் பிரமாதப்படும் இந்தப் பத்து நாளும் கோயில் திருவிழாக் கோலத்துடன் ஜொலிக்கும் கொலுவின் நடுநாயகமாக பெரிய உருவத்தில் திருப்பதி ஏழுமலையான் தத்ரூபமாக கொலு மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார்,அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அழகாக காட்சி தருவாள், நாட்டியம், வீணை, வயலின், பாட்டு என ஒவ்வொரு நாளும் கோவிலுக்குச் சென்று இன்றைக்கென்ன அலங்காரத்தில் அன்னை இருப்பாள், யாரின் நாட்டியம், பாடுவது யார், இன்று வயலினா, வீணையா வாசிக்கப் போவது யார் என அறிய ஆவலாக போய்ப் பார்க்க மனதிற்கு ரெம்ப மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருக்கும்.
ஒரு கோவிலைப் பற்றி சொன்னால் அங்குள்ள குருக்கள் பற்றியும் கண்டிப்பாக சொல்லத்தான் வேண்டும்.
தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்யும் ரமேஷ் குருக்கள் கைகளில் அப்படி என்ன சக்தி இருக்கோ தெரியாது மூலஸ்தானத்தில் அம்பாளின் அழகை ரஸித்து அடுத்து கீழே கொலுமண்டபம் சென்றால் அங்கு வேறொரு அலங்காரத்தில்! விதவிதமாக ஒவ்வொரு நாளும் அவரின் கைவண்ணத்தில் தோற்றமளிக்கும் அம்பாள் இருக்கும் அழகு!.
நவராத்திரி சமயம் பலவிதப் பழங்களைக் கொண்டு மாலையாகக் கட்டி அவளுக்கு அணிவித்து அவர் செய்யும் அலங்காரம்(!) கணீரென்ற குரலில் அவர் (மட்டுமல்ல இன்னும் மற்ற குருக்களும் அவர்களும் மிகச் சிறந்தவர்கள்) செய்யும் அர்ச்சனை (பாடும்) அந்தாதி! அத்தனையும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடும்!
தவிர்க்க முடியாத தருணத்தில் அவர் ஊர் சென்றிருக்கும் சமயம் இங்கே அம்பாளின் முகத்தில் அவரின் பிரிவு தெரியும்!.
அவரைப் பற்றிய சிறு குறிப்பு:
அலங்காரபூஷணம் அருள்ஞானமணி (இவருக்கு திருமுருக கிருபானந்த வாரியார் கொடுத்த பட்டம்), சந்தனகலா சிற்பி கம்பீரகானமணி (Dr.வான்மீகிநாத ஸ்தபதியினாலும், இங்கு ராஜேஸ்வரி கோவில் தலைவரினாலும் கொடுக்கப்பட்டது),சென்னை குமரக்கோட்டம் ஸ்தானிகர் சேகல் (சொந்த ஊர்) சுந்தரமூர்த்தி கைங்கர்ய சபா ஸ்தானிகர் சிவஸ்ரீ ரமேஷ் சிவாச்சாரியார்(!) என்பவர்தான்!. படித்தது திருச்சிமாவட்டத்தில் உள்ள அல்லூரில், குரு விஸ்வாநாத சிவாச்சாரியார். இத்தனைக்கும் இவர் ஒன்றும் அப்படி வயதானவர் இல்லை), எல்லாம் ராஜேஸ்வரியின் கருணையோ! அப்படித்தான் இருக்கும். ஏனென்றால் ரமேஷ்க் குருக்கள் மட்டுமல்ல இன்னும் அம்பாளுக்கு சேவை செய்ய இந்த கோவிலுக்கு வரும் எல்லோருமே எல்லா விதத்திலும் சிறந்தவர்களாகத்தான் திகழ்கிறார்கள். அதோடு அங்கு எந்நேரமும் அத்தனை பேரும் மகிழ்ச்சியுடனும் மலர்ந்த முகத்துடனும் சேவை செய்வதைப் பார்க்கும் போதே தெரியும் அவள் எவ்வளவு கருணை உள்ளவள் என்று!
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் நுழைவாயிலில் இருபத்தைந்து படிகள் ஏறி மேலே வந்தால் பளிச்சென்று காற்றோட்டத்துடன் விசாலமான பிராத்தனை மண்டபம்! (உள்ளே நுழைந்தவுடன் மனதில் ஏற்படும் அந்த உணர்வு! வந்து பாருங்கள் தெ(பு)ரியும்) கோயிலின் அடித்தளத்தில் கல்யாண மண்டபம் அதன் மேல்த் தளத்தில்த்தான் ஆலயம் அமைந்திருக்கிறது. மண்டபத்தின் உள்ளே ஆலயத்தின் பிரதான கருவறையின் இடப்பக்கத்தில் சித்திவிநாயகராக வீற்றிருக்கிறார் ஐந்து கரப் பெருமான். ஆலயத்தின் மற்ற திருமேனிகளைப் போலவே இந்தத் திருமேனியும் தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பி தேவகோட்டை முத்துக் கருப்பரால் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப் பட்டதாகும்! 1977ல் நிகழ்ந்த முதல்த் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவில் இத்திருமேனி பிரதிஷ்டை செய்யப் பட்டது.
சித்திவிநாயகரைச் சுற்றி வலம் வரும்போது முதலில் காட்சி அளிப்பவர் விஷ்ணு துர்கை என வழங்கப்படும் அன்னை துர்காதேவி, தொடர்ந்து வலம் வர (பிரதானக் கருவறையின் வலப்பக்கம்) இங்கு காட்சி அளிப்பவர் (பாலசுப்பிரமணியனாக அருள்பாலிக்கும்) திருமுருகப்பெருமான் ஆவார். அடுத்து பிரார்த்தனை மண்டபத்திற்கு வரும் படிக்கட்டுகளின் எதிரே மூலஸ்தானம், வாயிலில் துவாரபாலகர்கள் (தூய வெண்கற்களில்) இருவருடனும், எதிரே ஏற்றமுடன் காட்சியளிப்பது பொற்றாமரையின் மேல் அமர்ந்த நிலையில் சௌந்தரவல்லியாக உலகநாயகி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரித் தாயார்.
பிரார்த்தனை மண்டபத்தின் இருபுறமும் இரு சிறிய மண்டபங்கள் உள்ளன, மூலஸ்தானத்தின் இடப்புறம் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஸ்ரீகணேசர், ஸ்ரீதுர்கை, வள்ளிதெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள நடராஜ மண்டபத்தில் சண்டிகேஸ்வரராக சிவபெருமான், சிவகாமி சமேதரராய் நடராஜர், நாயன்மார்கள் நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கீழே ஆலயத்தின் இடப்பக்கம் வெளிப் பிரகாரத்தில் ஆற்றின் ஓரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கென்று தனி திருக்கோயில் அமைந்திருக்கிறது.
நவக்கிரக சந்நிதிக்கும் ஆற்றுக்கும் இடையில் அரசமரம் ஒன்று ஆலயத்தின் மேல் குளு குளுவென்று தன் நிழலைப் பரப்பிக் கொண்டு கம்பீரமாக நிற்பது, ஆற்றின் இருபக்கமும் (கோயிலின் உள்ளே) செண்பக மரங்களும், கரும்பும், நவக்கிரக மூலஸ்தானத்திற்கு வலப்புறம் பெரி(ய்)யநாவல் மரம் ஒன்று(!) மஞ்சள் பூக்களுடன் பழங்களுடன் பசுமையாக கிளை பரப்பி நிற்பதும் (கொட்டிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கி ஒட்டியிருக்கும் மண்ணை ஊதும் போது ஔவையும், ஆடுமேய்க்கும் முருக(சிறுவ)னும் நினைவில் வருவது!) கருவறையின் முன்புறம் வில்வமரம் ஒன்று உயர்ந்து அடர்ந்த கிளைகளுடன், கோவிலின் உட்புறம் வன்னி மரங்களும், ஆலயத்தின் இடப்பக்க நுழைவாயிலுக்கும் கோயிலின் வெளிப்பிரகாரத் துக்கும் இடையில் இருவேப்பமரங்கள் இம்மரங்களின் கிளைகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு மேல் குடைபோல் படர்ந்து இருப்பதும் அதிசயம்! அற்புதம்! அழகு!.
மலேசியா வருபவர்கள் அவசியம் ராஜராஜேஸ்வரியை தரிசித்துச் செல்லவேண்டும் அவசியம் வாருங்கள் (அப்படியே எங்கள் வீட்டிற்கும்?) இது என் வேண்டுகோள்.
===o===
இவ்வளவு சொன்னவள் இக்கோயிலின் வரலாறு சொல்ல வேண்டாமா?
ம.இ.க.அம்பாங் கிளையின் அன்றைய தலைவரும், அம்பாங் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு சுப்பையா அவர்கள் 19.11.1956 அன்று இராஜராஜேஸ்வரி ஆலயம் எழுப்ப அம்பாங் சாலையில் நான்காம் மைலில் இருந்த நிலத்தை வழங்கக் கோரி அம்பாங் மாவட்டத் துணையதிகாரிக்கு எழுதிய கடிதம்தான் ஆலயம் உருவாகக் காரணம்! ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது, ஆனாலும் ஒரு மாற்று நிலத்தை அடையாளங்காட்டி மூன்று வருடங்கள் விடாது தொடர்ந்து செய்த அவரின் பெரு முயற்சி வெற்றியளித்தது!மாநில முதல்வர் நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தி 1.6.1959 தேதியிட்டு கோலலம்பூர் நில அலுவலகத்தில் இருந்து அனுப்பிய கடிதம் மூலம் உறுதியானது.
அதன் பிறகு மூன்று வருடங்களில் ஜாலான்(ரோடு) உலுகிளாங்-கில் (என்வீடும் இருப்பது!) இருந்த 1/3ஏக்கர் நிலம் 5.11.1962 அன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டது. அதுவே இன்று ஆலயம் அமைந்திருக்கும் நிலமாகும். அதன் பிறகு பத்து வருடங்கள் கழித்து 1972ல் ஆலயக் கட்டடக் குழு அமைக்கப் பட்டு பதிவு செய்யப்பட்டது, அன்னை மாரியம்மன் பெயரில் ஆலயம் எழுப்ப1973ல் நிதி வசூல் செய்து, பின்னர் மலாயாப் பல்கலைக்கழக இந்தியத் துறையின் அன்றைய பேராசியர் கோ.சுந்தரமூர்த்தி அவர்களின் ஆலோசனைக்கிணங்க ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஆலயம் எனும் பெயரோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஸ்தபதி திரு.இராமசாமி அவர்களின் தலைமையில் நிர்மாணிப்புப் பணி தொடங்கியது.
அன்றே சுற்று சூழல் அழகுற அமைய பயன்தரும் மரங்கள் பூச்செடிகள் நடப்பட்டு அவை இன்று சோலையின் நடுவே அமைந்த ஆலயமாகப் புகழ் பெற்றுவிட்டது!
15.11.74 அன்று ம.இ.கவின் அன்றைய தேசியத் தலைவரும் தொழில் அமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ வே.மாணிக்கவாசகம் அவர்கள் அடிக்கல் நாட்ட கட்டடவேலை தொடங்கி டத்தோ டாக்டர் பி.டி.அரசு, டத்தோ வி.எல்.காந்தன் ஆகியோரின் முயற்சியில் சிலாங்கூர் மாநில முதல்வர்களின் நிதியுதவியாலும், பலவிதமான முயற்சிகள் எடுத்து நிதிதிரட்டி ஆலயம் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவுக்கு தயாராகி 26.6.1977 அன்று காலை முதலாவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அரசு நிலம் வழங்கி பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு திரு.சுப்பையா அவர்களின் கனவு நனவாகியது!
1982ல் (ஆலய வளாகத்தில் அமைந்துள்ள) நவக்கிரக சந்நிதி நிர்மாணிக்கபட்டு 9.7.1982ல் நவக்கிரகப் பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 9.7.1989ல் இரண்டாவது கும்பாபிஷேகம் சைவத்திரு சாம்ப மூர்த்தி சிவாச்சாரியாரால் நடத்தப் பட்டது. அதுபோது ஆலய வளாகத்தினுள் மகாலட்சுமி தடாகம் ஒன்றும் நிறுவப்பட்டது.
அதன் பிறகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் யோசனையின் பேரில் அவர்களாலேயே செயல்வடிவம் பெற்று பல மாற்றங்களுடன், மேலும் சில சீரமைப்புகள் செய்து ஆலயத்தை அழகுற அமைத்து, பக்தர்களின் நன்கொடையினாலும் வங்கி கடன் பெற்றும் 24.12.1998ல் ஆலயத்திற்கு அடுத்துள்ள இடத்தையும் ஒப்பந்தம் செய்து துப்புரவு செய்து நில வாஸ்து பூஜை 28.10.1999ல் நடத்தி, மூன்றாவது கும்பாபிஷேக விழாவின் யாகசாலை பிரம்மாண்டமாக அமைத்து (எங்களின் திருமண தினமான!) 3.6.2001 அன்று கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக பெரிய விழாவாக நடந்தேறியது, இன்றளவும் மறக்க முடியாதது .
ராஜ ராஜேஸ்வரியின் ஆலயம் இருக்கும் இடம்:
SRI RAJA RAJESWARY TEMPLE
4 1/2 MILES,JALAN ULU KELANG
68000 AMPANG,
SELANGOR DARUL EHSAN.
MALAYSIA.
நன்றி: இராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
(இரண்டு வருடங்களுக்கு முன் தோழியர் http://womankind.yarl.net/archives/2004/10/22/280 வலைப்பதிவில் எழுதியது).

வெள்ளி, ஏப்ரல் 14, 2006
"புத்தாண்டு வாழ்த்துகள்"
புதிய நம்பிக்கையோடும்
புத்துணர்ச்சியோடும்
புதுப்பொலிவோடும்
நல்லதை செய்யவும்
நல்லதை நினைக்கவும்
நல்வழி காட்டவும்
இயற்கை வளம்
குன்றாதிருக்கவும்
பகை,போர்,பசி,பிணி
இல்லாதிருக்கவும்
உலகமெங்கும்
அமைதியும் நிம்மதியும்
பெருகவும் இறைவனை
வேண்டி அனவருக்கும்
"புத்தாண்டு வாழ்த்துகள்"
புத்துணர்ச்சியோடும்
புதுப்பொலிவோடும்
நல்லதை செய்யவும்
நல்லதை நினைக்கவும்
நல்வழி காட்டவும்
இயற்கை வளம்
குன்றாதிருக்கவும்
பகை,போர்,பசி,பிணி
இல்லாதிருக்கவும்
உலகமெங்கும்
அமைதியும் நிம்மதியும்
பெருகவும் இறைவனை
வேண்டி அனவருக்கும்
"புத்தாண்டு வாழ்த்துகள்"
புதன், ஏப்ரல் 12, 2006
நடை அனுபவம்
கொஞ்ச நாளாவே நடக்கறதை நெறுத்திட்டேன் ஏன்? சோம்பேரித்தனமா இல்லை நேரமில்லாததாலா? என்னவென்றே தெரியலை இன்றுமட்டும் இன்றுமட்டும்னு ஒரேயடியா நெறுத்திட்டேன்.
இனி முடியாது மறுபடி தொடரணும் என்ற முடிவோடு இரண்டு நாள் முன் மீண்டும் நடைபயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்.
வழியில் எதிர்படுபவர்கள் 'ஹாய் என்று கைகாட்டுபவர்களும்,என்ன ரொம்ப நாளா ஆளைக்காணும் என்று புன்னகைக்கிறவர்களுமாய் 'என்ன முன்பு இருந்ததற்கு இப்போ மெலிஞ்சிட்டீங்களே?!இல்லையே அப்படியா தெரியுது!
(இரண்டுகிலோ கூடியிருப்பது எனக்குத்தானே தெரியும் ஹி ஹி)இப்படி சந்தோஷமாய்!
எத்தனை மாதங்களுக்கப்புறம் இந்தப் பக்கம் வருகிறேன், ஆனாலும் அங்கு ஒருவீட்டில்(என் சினேகிதர்கள்!)மூன்று நாய்குட்டிகள்(?)(என்ன ஒற்றுமை!) மறக்காமல் ஓடிவந்து கேட்டின் அருகே நின்று கொண்டு வாலை ஆட்டி ஆட்டி(இப்படி கூட வாலை ஆட்டமுடியுமா என்ன!) நாங்கள் உன்னை மறக்கவில்லை தெரியுமா என்பது போல் அவைகளின் அன்பை தெரிவிக்க,(ஒவ்வொரு நாளும் அவ்வீட்டைக் கடக்கும் போதும் சும்மா போக மாட்டேன் அவைகளைக் கூப்பிட்டு கொஞ்சிவிட்டுதான் போவேன்) ஒரு நாளாவது ஏதாகிணும் பிஸ்கட் கொண்டுவந்து கொடுக்கணும் என்று மனதில் நினைத்ததோடு சரி அதை போடப்போனால் அதன் உரிமையாளர்கள் விரும்ப மாட்டார்களே ஏதும் சொல்லிவிட்டால்)என் பங்கிற்கு நானும் கையை காட்டி அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது போய்க் கொண்டே இருப்பேன் ஒரு(பெரிய) சுற்று சுற்றி திரும்பவும் அங்கு வரும்போது சிறிது தூரத்திலேயே நான் வருவதை அறிந்து மீண்டும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று முன்பக்கம் வந்து தயாராய் வாலை ஆட்டிக் கொண்டு நிற்கும் அழகு!.
அப்பாடி நடக்க ஆரம்பித்தபிறகு என்ன சுகம் என்ன சுறுசுறுப்பு!கால்களில்மட்டுமல்ல,மொத்த உடம்பில், மனத்தில் எங்கிருந்துதான் இத்தனை உற்சாகம் வருகிறதோ!நடக்கிறதால எவ்வளவு ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கிறது!ஆனால் ஏனோ நிறையபேர் இதை ஒரு பெரிய வேலை(என்னன்னமோ வேலைகள் எல்லாம் செய்கிறார்கள்)என நினைத்து
ஒதுக்கி விடுகிறார்கள்.
எடை கூடிவிட்டது சாப்பாட்டை குறைக்கணும் அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக்கூடாது என்று எல்லாத்தையும் குறைத்து கடைசியில் எதுவும் செய்யமுடியாமல் உடம்பில் சத்தில்லாமல் பலமிழந்து விடுகிறார்கள்,ஏன் இப்படி?
இவர்களுக்கு நான் சொல்வேன் காலையிலோ மாலையிலோ ஒரு நடை போய்விட்டு வாருங்கள் உடம்புக்கு மட்டுமல்ல
மனதிற்கும் நல்லது என்று, யார் கேட்கிறார்கள்.(ஏதோ விளம்பரத்திற்கு அட்வைஸ் பண்ணுவது போல் இருக்கோ? :))
அய்யய்யோ மழை ஆரம்பிச்சுருச்சே இனி எங்கே நடக்கிறது ஒரே ஓட்டம்தான்! :)
எத்தனை பேருங்க நடக்கிறீங்க? சொல்லுங்கள் உங்கள் நடை அனுபவத்தை
அனைவருக்கும் 'புத்தாண்டு வாழ்த்துகள்'

திங்கள், பிப்ரவரி 27, 2006
சிறுகூடல்பட்டி
சிறுகூடல்பட்டிக்கு மேலும் பெருமை சேர்த்துவிட்டது!
மதிப்பிற்குறிய கவிஞர் சக்திதாசன் அவர்கள் அளித்த வாழ்த்துப்பா!
சிறுகூடல்பட்டி தந்த
சிந்தனைச் செல்வனே !
சிறியதாயொரு கிராமமல்ல
சிறுகூடல்பட்டி
சிறப்புமிகு தலமே !
கவிபாடும் உலகில் குயில்
தந்த
காவியத்திரு ஊராம் கேளீர் !
தமிழன்னை புகழ்சொல்லும்
தலைமகனென்று மனம் துள்ளும்
கற்றவர் சபையும்
கண்தூக்கிப்பார்க்கும்
கவியரசன் என்னெஞ்சத்து
தேரிருக்கும்
கண்ணதாசனைத் தந்தவொரு
மண்ணன்றோ
கரம்கூப்பி வணங்கிடுவேன்
அவ்வூரை
அழகுமிகு பட்டுச்சேலைக்கு
கரைவைத்துப்
அலங்காரம் செய்கையில்
மிளிரும் சேலைபோல்
சுவையான தமிழிற்கு எம்
கவிஞன் தந்த
சுந்தரஎழில் கண்டு துள்ளாத
தமிழனும் உண்டோ?
தமிழர் நெஞ்சங்களில்
வரைபடமாய்
தங்கியிருக்கும்
சிறுகூடல்பட்டியே
மனமிறைந்து கவியரசன்
வணங்கும்
மலயரசித்தாயின் அருள்
மிகுஊராம்
தமிழ் வாழ்க, கவியரசன்
புகழ் வாழ்க
தங்கமகனையீன்ற
சிறுகூடல்பட்டி வாழ்க!
சக்தி
சக்திதாசன்
கவிஞர் சக்திதாசன் அவர்களுக்கு நன்றி மிகவும்
எத்தனை பெருமை எத்தனை பெருமை!
எங்களருமை கண்ணதாசனை ஈன்ற
என் ஊரை நினைக்கும் போதெல்லாம்
எனக்கெத்தனை பெருமை!
எங்களம்மா மலையரசி தாயே
எல்லோரையும் காத்தருள்வாயே
என்றும் அன்பு

திங்கள், பிப்ரவரி 20, 2006
யாரிவர்
இந்த அற்புதமான கவிஞரின் பல கவிதைகள் எனக்கு புரிந்து கொள்ள கடினமாய் இருக்கும்(கவிதை நல்லா ரசிப்பேன் அதுக்கு மேலே தெரியாதுங்க)ஆனாலும் எப்படியாவது புரிந்து கொண்டுவிட வேண்டும் என்று திரும்ப திரும்ப படித்து பார்ப்பது மிகவும் பிடிக்கும்!
அவரின் கவிதைகளில் ஒன்று:
'மாலை ஸ்பரிசம்'
அன்று கடல் அமைதியாக இருந்தது
ஆழத்தை மறைத்துப் போர்த்திய மேலாடை
தூரத்து கப்பலசைவால்
சிற்றலையாய் வந்து என்
பாதம் தொட்டபோது உன் ஆழம் புரிந்தது
புன்னகையில் உள்ளம் சொல்லும்
காதலியின் சிரிப்பு போல
அது கப்பலுக்கும் எனக்கும் கூட
தொடர்பைத் தந்தது
வின்னில் பறந்த மாலைக் கொக்குகள்
கிழித்த காற்றசைவு காதில் பட்டது
சொல்லாமல் சொல்லும் உன் காதற் சேதியாய்.
மரங்கள் தளிர்த்தன
மலர்கள் மலர்ந்தன
நாளைச் சூரியன்
வந்து தொடும்
சுகம் நினைந்து.
உள்ளுக்குள் பசித்தது.
பசிதான் வாழ்வு
பசிதான் நெருப்பு
நெருப்புதான் ஓட்டம்.
ஓட வைக்கச் சிரிப்பதும்
ஓடவைத்துச் சிரிப்பதும்
உன் வழக்கமெனினும்
இன்று
உன் புன்னகை
அது தரும் சுகம்
தூரத்துச் சிற்றலையாய்
கொக்கு கிழித்த காற்றாய்
மெல்ல வந்து
என்னைத் தொடும்
உன் நினைவாக
உன் ஸ்பரிசமாக.
இன்னொன்று:
கற்கள் நாங்கள்.
சில நீரை எதிர்த்து
பாறாங்கல்லாய் இன்னும்
நிற்கின்றன
எதிர்ப்பின்றி நீரின் ஓட்டத்தில்
ஓடிய போது கூர்முனை
மழுங்கி சுருக்கம் போய்
கல்லென்றே தெரியாவண்ணம்
வெண்ணைய் போல் உருண்டு திரண்டு
உன் கை ஒரு நாள் தீண்டும் சுகத்தில்
வெட்டவெளியில்
ஆற்றுப்படுகையில்
அலைகடற்கரையில்
அன்னாந்து பார்த்தபடி
நான்".
இக்கவிதைக்கான விளக்கத்தை அவரிடம் கேட்டால்..!
வாழ்வைக்குறித்த என் தேடல்கள் பல நேரங்களில் கவிதையாய் உருவெடுக்கின்றன.
கவிதையை ஆரம்பித்து வைக்கிறார் திருமங்கை ஆழ்வார்(கலியன்)பெற்ற தாயைவிட
இறைவன் செய்வான் என்பது துணிபு. உண்மையா?என்று கேள்வி வருகிறது.பெளதீகமாக
இல்லை என்ற விடை கிடைத்தவுடன்,ஏன் குறை நமக்கு வருகிறது என்ற கேள்வி போகிறது.
அப்போது ஒருபுதிய புரிதல் வருகிறது.ஏதாவது நாம் முதல் போட்டிருந்தால் லாபம் வரவில்லை
என்று அங்கலாய்க்கலாம் .எந்த முதலும் இல்லாமல் வாழ்வு ஒரு மாபெரும் பரிசாக நமக்கு
கிடைத் திருக்கிறது.ஒவ்வொரு நிமிடமும் லாபம்தான்.நட்டம் என்பதே இல்லாத ஒரு
சமாச்சாரம் வாழ்வு.
எல்லாமே-நமது துக்கம்,சுகம்,இனிமை எல்லாம் வரவுதான்.அவைதான் வாழ்வை ஓட்டுகின்றன.இப்படி
பார்க்கும் போது வாழ்வைக் குறித்து சலிப்புறும் மனது சமனப்படுகிறது.கனியன் பூங்குன்றன் சொன்ன
உவமை உடனே நினைவிற்க்கு வருகிறது.புனல் வருகிறது.பூங்குன்றன் வாழ்வைப் புனலில் மிதக்கும்
இலையென்றான்.எனக்கென்ன மோ 'நாம்' கல் போன்றவர்கள் என்று தோன்ற்கின்றது.எதையும் வருகின்ற
வழியில் ஏற்றுக் கொள்ளாததால்,எதிர்வினை கொடுப்பதால் 'கல்' பொருந்தும் என்று தோன்றுகினறது.வெறும்
பாராங்கல்லாய் சிலர்,கூழாங்கல்லாய் சிலர்,கூழாங்கல்லில் ஒரு சேதி இருக்கிறது.
இதுதான் என் கவிதை. என்று அதற்கான விளக்கத்தை அழகாக எடுத்து சொல்வார்!
இவர் யாரென்று தெரிகிறதா?
இங்கே சென்றுதான் பாருங்களேன் http://kavithai.rediffblogs.com/
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~
சமீபத்தில் படித்ததில் ஒரு கவிதை...!(மேலே உள்ள கவிதைகளுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைங்க)
மீன் முள்
காலில் குத்த
துள்ளிக்குதித்த
என்பிள்ளையிடம்
கேட்டேன்
மீன்ஏன் துள்ளுகிறது?
பிள்ளைத்தமிழ் பேசியது:
மீனின்ஒரு முள்
குத்தியே நான்
குதித்து துள்ளீனேன்
இத்தனை
முள்ளும்மொத்தமாய்க்
குத்தினால்
ஏன்
துள்ளாது மீன்?
அப்துல் காதர்.----------
அன்பு மீனா.

சனி, பிப்ரவரி 18, 2006
தைப்பூசம்
சென்ற சனிக்கிழமையன்று (பிப்ரவரி 11) பினாங்கு தைப்பூசத்திற்கு சென்று வந்தேன் அதன் நினைவாக...
(சென்ற வருடம் 'மின்சுவடி'யில் எழுதியது)
தைப்பூசம் என்றவுடன் தண்ணீர்மலை முருகனின் முறுவலிக்கும் முத்தான முகம் மனதில்!தமிழ் மக்கள் மட்டும் இன்றி சீனர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள். அவன்மேல் முழு நம்பிக்கை வைத்து வணங்கி வழிபடுகிறார்கள். அவனும் அவர்கள் கேட்பதெல்லாம் உடனுக்குடன் வழங்கி திக்கு முக்காட வைக்கிறான்.
அவர்களும்தான் ஒவ்வொரு வருடமும் அன்னதானத்திற்கு மூட்டை மூட்டையாய் அரிசி, காய்கறிகள், பழங்கள், அவன் பவனிவரும் பாதையெல்லாம் (கொளுத்தும் வெயிலில் காத்திருந்து) கோபுரம்போல் குவித்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் என (உடைத்து) தங்களின் அன்பைப் பொழிந்து அவனை மலைக்க வைத்து விடுகிறார்கள்.ஐயாயிரம், பத்தாயிரம் என்று அவன் ஊர்வலம் செல்லும் சாலை நெடுக குவியல் குவியலாய் எங்கு பார்த்தாலும் தேங்காய்கள்! அதன் மேல் கட்டுக் கட்டாய் ஊதுபத்திகள்! சாலையெங்கும் ஆறாக ஓடும் தேங்காய்த் தண்ணீர்!.
பினாங்கில் தைப்பூசத் திருவிழாவின் முதல்நாளை 'செட்டி(நகரத்தார்)பூசம்'எனச் சொல்வார்கள். பூசத்திற்கு இரண்டு நாள் முன் பினாங்கு ஸ்தீரீட்டில் உள்ள கோவில்(கிட்டங்கி) வீட்டில் நகரத்தார்களின் மயில்காவடிகளுக்கும், முருகப் பெருமானுக்கும் பூசைகள் செய்து வணங்கி வழிபட்டு, அடுத்த நாள் (பூசத்திற்கு முதல் நாள்) கோவில் வீட்டில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நகரத்தார்களின் காவடிகள் முன் செல்ல வெள்ளிரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் புறப்படும்.
வழி நெடுகிலும் மக்கள் (ஏராளமான சீனர்களும்) அர்ச்சனைகள் செய்து முன் குறிப்பிட்டபடி பல்லாயிரக் கணக்கில் தேங்காய்கள் உடைக்க அங்கங்கே நின்று அவையெல்லாவற்றையும் அன்புடன் ஏற்று மெதுவாக வரும் ஊர்வலம் மதியம் 'காமாட்சியம்மன்' ஆலயம் வந்தடைந்து அன்னையின் ஆசி பெற்று அடுத்து, பக்கத்திலேயே எதிர்புறத்தில்'சிவன்' கோவில் வந்தடைந்து அய்யனின் ஆசியையும் பெற்று- அங்கு சிறிது நேரம் இளைப்பாற்றி மீண்டும் அங்கிருந்து தண்ணீர்மலைக்கோவிலை நோக்கி தன் ஊர்வலத்தை தொடருவார்!.
மதியம் ரதத்தின் கூடவே நடக்கும் பக்தர்களுக்கு (வெயிலில்) கால் சுடாமல் 'பினாங்கு நகராட்சி' சாலை நடுவே தண்ணீர் ஊற்றிக் கொண்டே செல்வது! (தேங்காய்த்தண்ணீரும் சேர்ந்து ஓடும்!) அந்த சூடுபறக்கும் சாலையில் காலணி அணியாமல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் இதமாயிருக்கும்.ஊர்வலம் போகும் வழியெங்கும் தனியார் மற்றும், அரசாங்க நிறுவனங்களும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், ஜூஸ், காப்பி, டீ உள்பட அன்னதான(மு)ம் வழங்குவதும், ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல் வாசலிலும் சிறு சிறு செயற்கை நீரூற்றுகளும் அதன் மேல் விநாயகர், முருகர், அம்பாள், சிவன் என்று விதவிதமான தெய்வச் சிலைகளை வைத்தும்; சில தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம்! சாலையில் வண்ண வண்ணமாக, பெரிய பெரிய ரங்கோலியிட்டு!அன்று இரவு
வெள்ளிரதம் தண்டாயுதபாணி கோவில் வந்தடைவதற்கு இரவு பத்தரை ஆகிவிடும்.
அதன்பின் சாமி இறக்கி ஆலயத்தின் உள்நடையில் நிறுத்தி பக்தர்கள்' இருவர் பாமரம்வீச பார்த்திருக்கும் அத்தனை பேரும் பரவசமடைய- பெரியவர் ஒருவர் கட்டியம் கூற (முருகனின்மேல் பாடுவார்) முருகன் கனிவோடு நின்று கேட்டிருக்க- பார்த்திருக்கும் அனைவருக்கும் அற்புதமான உணர்ச்சிகள் அலைமோத- தவறாது காணவேண்டும் இக்காட்சியை!. இரண்டாம் நாளான பூசத்தன்று காலையில் நான்கு மணியில் இருந்தே காவடிகள் வர ஆரம்பிக்கும். பினாங்கு சிவன் கோவிலில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டு கால் நடையாக தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து பால் குடங்களைî செலுத்துவார்கள்.நேரம் ஆக ஆக பால் குடங்கள், வித விதமான அழகான காவடிகளுடன் ஆடல் பாடலுடன் அவர்கள் வரும் அழகு!கோவில் கொள்ளாத கூட்டம்; கொண்டாட்டம்.அத்தனை பேரும் கீழே தண்டாயுதபாணியைத் தரிசித்து அதன் பிறகு எதிர்புறத் தில் மலைமேல் இருக்கும் பால தண்டாயுதபாணியை தரிசித்து செல்வர்.அன்று முருகப் பெருமானுக்கு மஹேஸ்வர பூஜை அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது
இன்னொருபுறம் குழந்தைகளுக்கு முடியிறக்கி தொட்டி கட்டுதல்.
(ஒரே சமயத்தில் ஐந்து ஆறு குழந்தைகளுக்கும் தொட்டில் கட்டுவார்கள்.) இரண்டு கரும்புகளை ஒன்றுசேர்த்து இரு புறமும் இருவர் பிடித்துக் கொள்ள பட்டுப் புடவைகளைக் கொண்டு அதில் தொட்டில் கட்டி (புடவையின் மேல் அழகாக பூச்சரங்கள் தொங்கவிட்டு) தொட்டிலுக்குள் குழந்தைகளைô படுக்கவைத்து சில குழந்தைகள் பலமாகì கத்தò துவங்க, சில குழந்தைகள் எந்தî சலனமும் இல்லாமல் சுகமாகò தூங்க அவரவர் சுற்றத்தார் சுற்றிலும் வர மேள தாளத்துடன் வரிசையாக கரும்பு
தொட்டில்கள் முருகனின் சன்னிதியைப்பிரகாரமாய்
வந்து வேண்டுதலை நிறைவேற்று வார்கள்.
பகல் பன்னிரண்டு மணிக்கு ஆராதனையின் உச்சì கட்டமாக முருகனுக்கு தீபமாகி அதன் பின் அன்னத் திற்கும் (கோபுரம் போல் குவித்திருக்கும் சாதத்திற் கும்) மற்றும் சமைத்து வைத்திருக்கும் பாயசம், சாம்பார், ரசம், காய்கறிகள் வகைகளுக்கும் தீபம் காண்பிக்கும் போது (அன்னதீபம் பார்க்க வேண்டி அடங்காத கூட்டத்திற்குள் முண்டியடித்து) முன்வந்து நின்று அன்னதீபம் பார்ப்பதில் பரம திருப்தி!.
இதற்கிடையில் பலர் மஹேஸ்வர பூஜை முடிந்து அன்னதீபம் காண்பிப்பதற்குள் மேல் கோவிலுக்குô போய்வந்து விடலாம் என்று கிளம்பி பால தண்டாயுதபாணியைò தரிசிக்கவென்று அங்கு செல்ல, அங்கேயும் அபிஷேகம் ஆரம்பிக்க (குடம் குடமாகô பால் அபிஷேகம்!) தரிசனம் காண வந்தவர்களில் சிலர் கீழே போய் அன்னதீபம் (மேலேயும் அன்னதீபம் அன்னதானம் உண்டு) பார்க்கவேண்டுமே என்பதையும் மறந்து அங்கேயே அமர்ந்து கண்கள்குளிரô பார்த்து அதன்பின் அவசர அவசரமாகச் செல்வர்; மற்றவர் மேலேயே அன்னதீபம் பார்த்துச் செல்வர்.அன்னதீபம் காட்டியபிறகுதான் சாப்பாடு.
கோவிலுக்குள்(சொக்கட்டான் வடிவத்தில் அமைந்துள்ள
இடத்தில்) நாலாபுறமும் இலை போட்டுவந்திருக்கும் அவ்வளவு கூட்டத்திற்கும் இல்லையென்னாது மதியம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கும் சாப்பாட்டுô பந்தி மாலை நான்கு வரை தொடர்ந்து நடக்கும்.காவடிப் பிள்ளைகள் யாவரும் கலந்து கொண்டு உற்சாகமாக சளைக்காமல் பரிமாறுவார்கள்.நாள் முழுதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் காவடிகள். கடைசிக் காவடி இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து அதனுடன் பூர்த்தியடையும் அன்றைய பொழுது.
மூன்றாம் நாள் காலை('நகரத்தார்கள் பூசத்திற்கு முதல் நாள் இரவு தண்டாயுதபாணி ஆலயத்தில இறக்கி வைத்த ) காவடிகளுக்கு 'காவடிப் பாட்டுகள்' பஜனைகள் செய்து நல்ல நேரம் பார்த்து காவடி தூக்கி ஆலயத்தின் அருகில் எதிர்ப்புற சாலையில் அமர்ந்திருக்கும் முனீஸ்வரரின் சன்னிதியின் முன் (சாலையில்) சிறிது நேரம் (காவடி) ஆடி அதன் பிறகு தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்புறம் ஆடுவார்கள்; (ஆட்டம்) அற்புதமாயிருக்கும்!
அதன் பின் உள்ளே பிரகாரத்தில் நான்கு மூலையிலும் சிறிது சிறிது நேரம், அப்படியே பிரகாரமாய் வேலின் முன் வந்து வரிசையாக சன்னிதிக்குச் சென்று காவடியை தண்டாயுதபாணிக்குச் செலுத்துவார்கள்.
அப்படிக் கொண்டு செலுத்துவதற்குள் அவர்கள் ஒவ்வொருவரும் "முருகா முருகா" என்று துடிக்கும் துடிப்பு!.(பூசத்திற்கு முதல் நாள் இரவு கோவிலுக்குள் வந்த காவடிப் பிள்ளைகள்
மூன்றாம் நாள் காவடி செலுத்திய பின்தான் வெளியில் வருவார்கள்)
அதன் பிறகு தான் அவர்கள் எல்லோரும் குடும்பத்தாருடன் மலைக்குச்சென்று எந்த இடையூறும் இல்லாமல் நல்லபடியாக காவடி தூக்கிவர துணை நின்ற பால தண்டாயுதபாணிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிதறுதேங்காய் உடைத்து நன்றி தெரிவித்து தரிசனம் பார்த்துò திரும்புவார்கள்.
அன்று இரவு ஏழு மணிக்கு ஆலயத்தில் இருந்து முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் புறப்பட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடவர இரவு முழுதும் கோலாகலமாக வழியெங்கும் தேங்காய்கள் உடைத்து அர்ச்சனைகள் செய்து காலை ஏழு மணிக்கு மீண்டும் பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோவில் வீட்டை வந்து சேர்வார்.பினாங்கு'தைப்பூசம்' அவசியம் ஒரு தடவையாவது பார்க்க வேண்டும்.
எல்லோரும் தண்டாயுதபாணியின் அருள் பெற வேண்டி பிரார்த்திக்கிறேன்!
அன்பு மீனா.
(சென்ற வருடம் 'மின்சுவடி'யில் எழுதியது)
அவர்களும்தான் ஒவ்வொரு வருடமும் அன்னதானத்திற்கு மூட்டை மூட்டையாய் அரிசி, காய்கறிகள், பழங்கள், அவன் பவனிவரும் பாதையெல்லாம் (கொளுத்தும் வெயிலில் காத்திருந்து) கோபுரம்போல் குவித்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் என (உடைத்து) தங்களின் அன்பைப் பொழிந்து அவனை மலைக்க வைத்து விடுகிறார்கள்.ஐயாயிரம், பத்தாயிரம் என்று அவன் ஊர்வலம் செல்லும் சாலை நெடுக குவியல் குவியலாய் எங்கு பார்த்தாலும் தேங்காய்கள்! அதன் மேல் கட்டுக் கட்டாய் ஊதுபத்திகள்! சாலையெங்கும் ஆறாக ஓடும் தேங்காய்த் தண்ணீர்!.
பினாங்கில் தைப்பூசத் திருவிழாவின் முதல்நாளை 'செட்டி(நகரத்தார்)பூசம்'எனச் சொல்வார்கள். பூசத்திற்கு இரண்டு நாள் முன் பினாங்கு ஸ்தீரீட்டில் உள்ள கோவில்(கிட்டங்கி) வீட்டில் நகரத்தார்களின் மயில்காவடிகளுக்கும், முருகப் பெருமானுக்கும் பூசைகள் செய்து வணங்கி வழிபட்டு, அடுத்த நாள் (பூசத்திற்கு முதல் நாள்) கோவில் வீட்டில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நகரத்தார்களின் காவடிகள் முன் செல்ல வெள்ளிரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் புறப்படும்.
வழி நெடுகிலும் மக்கள் (ஏராளமான சீனர்களும்) அர்ச்சனைகள் செய்து முன் குறிப்பிட்டபடி பல்லாயிரக் கணக்கில் தேங்காய்கள் உடைக்க அங்கங்கே நின்று அவையெல்லாவற்றையும் அன்புடன் ஏற்று மெதுவாக வரும் ஊர்வலம் மதியம் 'காமாட்சியம்மன்' ஆலயம் வந்தடைந்து அன்னையின் ஆசி பெற்று அடுத்து, பக்கத்திலேயே எதிர்புறத்தில்'சிவன்' கோவில் வந்தடைந்து அய்யனின் ஆசியையும் பெற்று- அங்கு சிறிது நேரம் இளைப்பாற்றி மீண்டும் அங்கிருந்து தண்ணீர்மலைக்கோவிலை நோக்கி தன் ஊர்வலத்தை தொடருவார்!.
மதியம் ரதத்தின் கூடவே நடக்கும் பக்தர்களுக்கு (வெயிலில்) கால் சுடாமல் 'பினாங்கு நகராட்சி' சாலை நடுவே தண்ணீர் ஊற்றிக் கொண்டே செல்வது! (தேங்காய்த்தண்ணீரும் சேர்ந்து ஓடும்!) அந்த சூடுபறக்கும் சாலையில் காலணி அணியாமல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் இதமாயிருக்கும்.ஊர்வலம் போகும் வழியெங்கும் தனியார் மற்றும், அரசாங்க நிறுவனங்களும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், ஜூஸ், காப்பி, டீ உள்பட அன்னதான(மு)ம் வழங்குவதும், ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல் வாசலிலும் சிறு சிறு செயற்கை நீரூற்றுகளும் அதன் மேல் விநாயகர், முருகர், அம்பாள், சிவன் என்று விதவிதமான தெய்வச் சிலைகளை வைத்தும்; சில தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம்! சாலையில் வண்ண வண்ணமாக, பெரிய பெரிய ரங்கோலியிட்டு!அன்று இரவு
அதன்பின் சாமி இறக்கி ஆலயத்தின் உள்நடையில் நிறுத்தி பக்தர்கள்' இருவர் பாமரம்வீச பார்த்திருக்கும் அத்தனை பேரும் பரவசமடைய- பெரியவர் ஒருவர் கட்டியம் கூற (முருகனின்மேல் பாடுவார்) முருகன் கனிவோடு நின்று கேட்டிருக்க- பார்த்திருக்கும் அனைவருக்கும் அற்புதமான உணர்ச்சிகள் அலைமோத- தவறாது காணவேண்டும் இக்காட்சியை!. இரண்டாம் நாளான பூசத்தன்று காலையில் நான்கு மணியில் இருந்தே காவடிகள் வர ஆரம்பிக்கும். பினாங்கு சிவன் கோவிலில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டு கால் நடையாக தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து பால் குடங்களைî செலுத்துவார்கள்.நேரம் ஆக ஆக பால் குடங்கள், வித விதமான அழகான காவடிகளுடன் ஆடல் பாடலுடன் அவர்கள் வரும் அழகு!கோவில் கொள்ளாத கூட்டம்; கொண்டாட்டம்.அத்தனை பேரும் கீழே தண்டாயுதபாணியைத் தரிசித்து அதன் பிறகு எதிர்புறத் தில் மலைமேல் இருக்கும் பால தண்டாயுதபாணியை தரிசித்து செல்வர்.அன்று முருகப் பெருமானுக்கு மஹேஸ்வர பூஜை அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது

வியாழன், ஜூலை 14, 2005
நீண்ட நாட்களுக்கப்புறம்...
என் அபிமான கவிஞரின் கவிதை இன்று கண்ணில் பட்டது! அக்கவிதையை இங்கே இடவேண்டும் என்ற உந்துதலில் நீண்ட நாளுக்கப்புறம் மீண்டும் இன்று!
கனாக் கண்டேன்
அமுத நீர் சுரக்கும் இதயக் கிணற்றில்
ஊமைக் காயங்களாய் மூடிக் கிடக்கும்
அவளின் ஆசை ஊற்றுக்கண்கள்
அத்தனையையும்
அந்தரங்க விரல்கள் நீட்டி
மெல்ல மெல்ல உடைத்தான்
அவன்
வெள்ளம் வெள்ளம்
எப்போதும் இல்லாத அளவில்
விழி மனம் உயிர் ஆன்மா
அனைத்தையும் நனைத்துத் துவைத்து
பொங்கிப் பெருகி
அவளுள் ஒரு வெள்ளத் திருவிழா
குருதிச் சித்திரங்கள் தீட்டி
துடித்து வெடித்து விளைந்த
அவனின் கந்தகக் காயங்களிலெல்லாம்
மெல்லிய மன இழைகளால்
பொழுதுகள் தப்பாமல்
அவளின் நேச உயிர் ஒத்தடங்கள்
கண்ணீர் கண்ணீர்
இமைகளைக் கரைத்தழித்துக்கொண்டு
கருணையில் நெகிழ்ச்சியில்
கனிந்து குழைந்த அவனின் கண்களில்
காட்டாற்றுக் கண்ணீர்ப் பெருவிழா
ஆம்...
வாடி வதங்கி
உயிர்மட்டும் மீதம் வைத்து
வான் நோக்கிக்கிடந்த
காய்ந்த பழைய செடியில்
பூத்தது ஒரு சந்தனமுல்லை
காலப் பெருமரத்தில்
முட்டி மோதி அடிபட்டு
குற்றுயிராய்க் கிடந்த
ஒரு வண்ணத்துப் பூச்சு
திடுதிப்பெனத் தேடிவந்த
பொன் வசந்தத்தில்
மூச்சுப் பற்றி உயிர்த்தது
தன்னையே பதித்துப் பூத்த
சந்தன முல்லையின் இதயவனத்தில்
ஓர் ஈர முத்தமாய்ச் சென்றமர
கருகிக் கிடந்த சிறகுகளை
புத்துறவுக் காற்றில் புதுப்பித்துக்கொண்டு
சிறகடித்துச் சிறகடித்துச் சிலிர்த்தது
வாஞ்சைமிகு வண்ணத்துப் பூச்சு
வண்ணத்துப் பூச்சே வண்ணத்துப் பூச்சே
அங்கேயே நில் என் வண்ணத்துப் பூச்சே
அருகிலொருபோதும் வாராய்
என் உள்ளங்கவர் வண்ணத்துப் பூச்சே
என்னைப் பறித்தெடுத்துத்
தன் போலிக் கருங்கூந்தல் சூடி
விருந்துக்குச்செல்ல விரைந்து வருகிறாள்
அதோ... அதோ.... என் எஜமானி
நான் அவள் தோட்டத்து மலரல்லவா
நாமோ நியதிகளின் தவறல்லவா என்று
முகம் மூடி விசித்தது சந்தன முல்லை
தொடரும் இவைபோன்ற
பிரபஞ்சக் காட்சிகளில்
இயற்கைத் தளிர்களையெல்லாம்
துண்டுதுண்டாய் நறுக்கிப்போட்டு
எத்தனை எத்தனையோ
கூட்டுக்கறி சமையல்கள்
நிரம்பி வழியும் ஏக்கங்களில்
பெருகி உயரும் துயரங்களில்
சுற்றிச்சுழலும் பெருமூச்சுப் புயல்களில்
பிரபஞ்சம் நிச்சயம் அழிந்துபோகும் என்று
பிரபஞ்சமே கதறுவதுபோல்
கனாக் கண்டேன் நானின்று!
----- ---
என்றும் உங்களின் அன்புமிகு

செவ்வாய், நவம்பர் 02, 2004
தாமதம் ஏன்..
தாமதம் ம்..ம்.. என்ன செய்வது இந்த எழுத்தை சரி செய்ய எடுத்த
முயற்சியினால்தான் இத்தனை நாட்கள் ஆகிவிட்டது.
ஒருவாரமாக அடை மழை, உள்ளம் உடல் எல்லாம் குளிரில்
நடுங்குகிறது.மழையென்றதும் ஒரு நினைவு..
முன்பு ஒரு முறை உயிரெழுத்தின் முகப்புப் படத்திற்கு
(மழையில் நனைந்து மகிழும் ஒரு பெண்)பொருத்தமான
கவிதை எழுதவேண்டி (கவனிக்க) கவிஞர்களைக் கேட்டுக்கொள்ள
வழக்கம் போல் எனக்குள்ளிருந்த வான்கோழி துள்ளி எழ :))
நானும் எழுத!அன்று(4.8.03)நிறைவேறியது என் எவ்வளவோ
நாள் ஆசை.
'நனைந்த முகம்'
என் வீட்டின் வளவிற்குள்
குற்றாலத்தின் அருவியாய்
கூடருவாயில் கொட்டும்
அந்த மழையில்
குதூகலமாய்
முகம் நனைத்துக் குதித்த
என் பழைய நினைவு
பசுமையாய்...
இந்த முகம் பார்த்து!
''''''''''''''''''''''
இந்த மழையை நாம் எல்லாம் எப்படிப் பார்கிறோமோ, ஆனால் உயிரெழுத்தில் கிரி ஒரு மழைக் கவிதை எழுதியிருக்கிறார் வறுமையில் உழல்பவர்கள் எப்படி மழையை எதிர்கொள்கிறார்கள் என்று.
அதைப் படித்து இந்த விதத்தில் எப்போதாவது ஒரு கணமேனும் சிந்தித்தோமா என்று, நினைத்துப் பார்த்தேன், மனச் சங்கடமாகவும் அதை நினைத்து வெட்கமாகக் கூட இருந்தது. என்ன இப்படி இருந்திருக்கிறோமே என்று. ஓரிருவர்தான் மற்றவர்களின் இழப்புகளையும் இப்படி யோசிப்பார்கள் பெரும்பாலானவர்கள்(என்னப் போல்தான்)அவரவர்களின் கண் கொண்டுமட்டுமே பார்ப்பார்கள்,நீங்களும்தான் அதைப் படித்துப் பாருங்களேன்.
அவரின் மழைக் கவிதை:
மழை
ஊரே வேண்டி நிற்க
எனக்குமட்டும் மழை விருப்பமில்லை
ஏனென்றா கேட்டாய் தோழி?
காலடியில் நீரோடையும்
சுவரெல்லாம் நீர்வீழ்ச்சியும்
அடுப்பில் எரியும் நீரும் பார்த்திருக்கிறாயா நீ?
வா வந்துபார் எம் குடிசையில்!!
அடுக்களையும் அடுக்குமிடமும் ஒன்றாயிருக்க
படுக்கையும் கூரையும் பகலில் கைகோர்க்கும்
ஒற்றையறை குடிசைக்குள் பார்!
கொஞ்சம் முயன்றால் எண்ணிவிடலாம் வின்மீண்களையும்
எம்குடில் கூரைக்கண்களிடம் பலிக்காது உன் திறமை!
ஓட்டைக்கு ஒன்றாய் இறங்கினாலும்போதும்
காலடியில் ஓடையென்ன, ஓராழியே ஓடும் தோழி!
ஒருநாள் இல்லை
ஒவ்வொரு நாளும் பிழைத்திருக்க
இருட்டுமுதல் இருட்டும்வரை
ஓடவேணும் நாங்கள்
ஓரிடம் முடங்கினால் உண்டியேது?
கையூன்றி கரணமிட சேறு ஆகாது தோழி.
மாளிகை மாடமேறி மழை இரசிக்க ஆகும் உனக்கு.
இங்கே மழையன்றோ எம் குடிலேறும்,
எங்கே போவோம் நாங்கள்?
கால்கோப்பை நீர் உன் சிரமேறவே
மூன்றுநாள் தடுமல் உனக்கு
மேலிருந்து பொழியும் மழையில்
கால்வரை நனையும் எங்களை யோசித்தாயா தோழி?
சுத்தமான உங்கள் வீட்டின் கழிவுகள் எங்கே போகின்றன தெரியுமா??
சுற்றிவருகிறது எங்கள் வீடுகளையே!!
மழைக்கு பயந்து அவை ஒதுங்குவது
எங்கள் ஓட்டைக் குடிசையில்தான்!
நாங்கள் எங்கே ஒதுங்கட்டும் தோழி?
பணத்தின்மேல் பாயும் உங்கள்
பாடசாலைகள் நாங்கள் ஒதுங்கவும் வரிகேட்குமே??
இப்போது சொல் தோழி,
இன்னுமா என்னை மழையை இரசிக்கச் சொல்கிறாய்?
இன்னுமா என்னை மழையை விரும்பச்சொல்கிறாய்?
-கிரி
நன்றி கிரி.
(உங்கள் அனுமதி இல்லாமலே இங்கு போட்டதற்கு
மன்னித்துக் கொள்ளுங்கள் கிரி.)
இனி அடிக்கடி வருகிறேன்?
அன்புமிகு

வியாழன், அக்டோபர் 28, 2004
வாசகசாலை
என் சிறுவயதில் எங்கள் ஊரில் உள்ள வாசகசாலையில்
போய்ப் படிக்க மிகவும் ஆசைப்படுவேன்,ஆனால் மிகவும்
சிறுவயதென்பதால் என் அப்பாவின் வயதொத்தவர்கள் எல்லாம்
உள்ளே அமர்ந்து படிப்பதைப் பார்த்து அவர்கள் எல்லாம்
என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் வாசலோடு ஓடி வந்து
விடுவேன், தினமும் இது தொடரும்.
அதன் பிறகு அதை மறந்தே போய்விட்டேன் இன்று இங்கு
எனக்கென்று ஒரு வாசக சாலை!,இந்த என் புதிய இடத்திற்கு
என்ன பெயர் வைப்பது என யோசிக்கும் போது என்றோ மனதின்
ஆழத்தில் மூழ்கிக் கிடந்த 'வாசக சாலை' திடீரென்று வெளிவந்து
பழைய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வைத்து விட்டது!
நிறைய எழுத ஆசையுடன்..
ரங்கமீனா.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)