சினிமாபடம் போல் எதிரே விரிகிறது காட்சி!
சற்று பருத்த தேகம்,வெண்ணிற தலைமுடி,வெண்தாடி, மீசை முகத்தை மறைத்திருக்க வெண்ணிற வேஷ்டி சட்டையணிந்து... வணக்கத்திற்குரிய மகான் அவர், சோபாவில் அமர்ந்திருக்கிறார்.சுற்றிலும் யார் யாரோ!
அவருக்கு இடது புறத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் வீட்டின் உள் புறம் பார்த்து ஒரு பெயர் சொல்லி அழைக்கிறார்! அது கேட்டு ஐந்து வயது அழகுச்சிறுமி ஒருத்தி உள்ளிருந்து துள்ளி ஓடி வருகிறாள்!
அழைத்தவர் சிறுமியை அறிமுகப்படுத்த மலர்ந்த முகத்துடன் குழந்தை வணங்கி நிற்க அம்மகான் குனிந்து எதையோ எடுத்து இருகைகளினாலும் சிறுமியின் தலை தொட்டு ஆசீர்வதிக்கிறார், நல்லாரும்மா என்கிறார்!
அந்த சின்னஞ்சிறுபெண் தலையில் கொட்டும் நாணயங்களையும் பூக்களையும் தன் இரு கைகள் கொண்டு விலக்கி கண்கள் சுருக்கி குனிந்து குலுங்கி சிரித்து நிற்க... கலைகிறது கனவு!
2 கருத்துகள்:
இது என்ன ஒரு விசித்திரமான, வித்தியாசமான கனவு மீனா??
இதற்கு இன்னும் விடைதெரியவில்லை கோபி!
கருத்துரையிடுக