செவ்வாய், மே 30, 2006

'கீத கோவிந்தம்'

திரு நா.கண்ணன் அவர்களின் கவிதையே..பாடலாக!(ஆர்.எஸ்.மணி அவர்களின் குரலில் அவரே இசையமைத்தது!)

இங்கே: http://www.rsmani.com/gita_govindam/

கேட்டுப்பாருங்கள் உள்ளம் உருகும்! நான் மிகவும் ரசித்தது நீங்களும் ரசிக்க.


காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ....தெல்லாம்

தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ...தெல்லாம்

நீ வருவாயென்று
நானறிவேனதனால்
தினம் தினம் மணியோசை
கேட்டிட மனம் நாடி

வீற்றிருப்பேன் வாயில் முன்னே கண்ணா
வீற்றிருப்பேன் வாயில் முன்னே

காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

செம்பவழ மாலையிலே
வைத்த கரு முத்தினைபோல்
செம்மை நிற மாலை நேரம்
உன்னுருவம் தோன்றும் வரை

தாயினது கழுத்தினிலே
ஆடும் மணியோசை கேட்க
கொட்டிலிலே துடித்திருக்கும்
சின்னஞ் சிறு கன்றினைப் போல்

காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

நா.கண்ணன்

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்த கலியுகத்தில் இப்படி ஒரு கடவுள் பக்தி உள்ள பெண்ணா ஆச்சரியமாகத்தான் உள்ளது. கடவுளின் ஆசி என்றைக்கும் உனக்கு கிட்டட்டும்.

செந்தில் அழகு பெருமாள்.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

அழகான வரிகள்!
நிறைந்த இசை.

//செம்பவழ மாலையிலே
வைத்த கரு முத்தினைபோல்
செம்மை நிற மாலை நேரம்
உன்னுருவம் தோன்றும் வரை//

அருமையான உவமை.

இதைக் கண்ணன் பாடல்கள் திரட்டியான http://kannansongs.blogspot.com பதிவில் இட்டுக் கொள்ளலாமா?
மிக்க நன்றி!

meenamuthu சொன்னது…

தங்களின் மனம் நிறைந்த வாழ்த்து மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது செந்தில் அவர்களே!நன்றி

meenamuthu சொன்னது…

\\ http://kannansongs.blogspot.com பதிவில் இட்டுக் கொள்ளலாமா? \\

கேட்க வேண்டுமா?தாராளமாக ஷங்கர்!

தங்களின் கண்ணன் பாட்டுகள்! அத்தனையும் அருமையிலும் அருமை!