செவ்வாய், மார்ச் 01, 2011

ஸ்வர்ணலிங்கேஸ்வரர்!


                     திருச்சிற்றம்பலம்.


காசியில் நகரத்தார் சத்திரத்தில் ஒவ்வொரு
வருடமும் தீபாவளியன்று ஸ்வர்ணநாயகி
விசாலாட்சி மட்டுமே கொலுவிருந்து பக்தர்களுக்கு
காட்சி தந்த அம்பிகையின் பக்கத்தில் ஸ்வர்ண
லிங்கேஸ்வரரும் இருந்தால் எத்தனை அழகு!
என நினைத்த அடியாரின் எண்ணம் இன்று
நகரத்தார்களின் ஒத்துழைப்பினால் ஈடேற
அருள்  புரிந்த அழகு நாயகனின் அற்புத தரிசனம்!



வைரப் பிறை,வைர விபூதிபட்டையுடன் 3 ½ கிலோ
தங்கத்தில் செய்த சிவலிங்கம் காசி நகரவிடுதிக்கு
கொண்டு செல்லும் முன் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட
ஒன்பது நகரத்தார் கோவில்களுக்கும் சென்று பின்
எழுபத்தைந்து நகரத்தார்களின் ஊர்களுக்கும் எடுத்து
சென்று பிறகு(23)சென்னையில் திருவெற்றியூர் சென்று
நகரத்தார் சத்திரத்தில் வைத்து(சென்ற இடமெல்லாம் 
பொதுமக்கள் காண)அபிஷேக ஆராதனைகள் செய்து 
கோலாகலமாக பிப்ரவரி 26 (2011) திகதி டெல்லிக்கு
சென்று காசி நகரத்தார் சத்திரத்தில் சிவராத்திரியன்று 
ஸ்வர்ணாம்பிகையின் அருகில் ஸ்வர்ணலிங்கேஸ்வரர் 
பிரதிஷ்டை செய்யப்பட்டு அடியார்களுக்கு அருட்காட்சி
தருவார்.
                                             
                     திருச்சிற்றம்பலம்









1 கருத்து:

தக்குடு சொன்னது…

தங்க உம்மாச்சி பாக்கர்துக்கே 'தகதக'னு ஜொலிக்கறார் அக்கா! செட்டி நாட்டு மக்களோட கை ரொம்ம்ம்ம்ம்ப தாராளம்...:)