திங்கள், நவம்பர் 28, 2016

எழுத்து!


இருந்தவரெல்லாம் இல்லாதவராகிப்போக
இருப்பவரெல்லாம் இயலாதவராகிப்போனார்!
ஒன்றுக்கும் உதவாத எழுத்துக்கள்
வெளிவந்து என்ன சாதிக்கப்போகிறது
உள்ளுக்குள்ளேயே மரித்துப்போகட்டும்
சபிக்கப்பட்டதின் இறுதி விமோசனம்!
கால மாற்றத்தின் பிரிதொரு ஜன்மத்தில்
உணர்வுகள் மேலெழுந்து உயிர்பெற்றெழ
உலகுக்கு சொல்லும் உன்னத செய்தியாக
தன்னைத்தானே முன்னிருத்தி "வாழ்க"என்றது!

கருத்துகள் இல்லை: