வியாழன், அக்டோபர் 28, 2004

வாசகசாலை

என் சிறுவயதில் எங்கள் ஊரில் உள்ள வாசகசாலையில்
போய்ப் படிக்க மிகவும் ஆசைப்படுவேன்,ஆனால் மிகவும்
சிறுவயதென்பதால் என் அப்பாவின் வயதொத்தவர்கள் எல்லாம்
உள்ளே அமர்ந்து படிப்பதைப் பார்த்து அவர்கள் எல்லாம்
என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் வாசலோடு ஓடி வந்து
விடுவேன், தினமும் இது தொடரும்.

அதன் பிறகு அதை மறந்தே போய்விட்டேன் இன்று இங்கு
எனக்கென்று ஒரு வாசக சாலை!,இந்த என் புதிய இடத்திற்கு
என்ன பெயர் வைப்பது என யோசிக்கும் போது என்றோ மனதின்
ஆழத்தில் மூழ்கிக் கிடந்த 'வாசக சாலை' திடீரென்று வெளிவந்து
பழைய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வைத்து விட்டது!

நிறைய எழுத ஆசையுடன்..
ரங்கமீனா.

3 கருத்துகள்:

Gnaniyar @ நிலவு நண்பன் சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு,
தங்களின் வாசக சாலை மிக அருமை.நான் ரசிகவ் Gnaniyar.
±ýۼ àì¸õ Å¢üÈ ¸¡Í¸û ¸Å¢¨¾ìÌ
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.என்னுடைய rasikow@gmail.com

±ýÈ þó¾ Ó¸ÅâìÌ «ÛôÀ×õ.
«ýÒ¼ý ÌØÁò¾¢ø þ¨½Â §ÅñÊÂо¡§É ¿ñÀ§Ã

ரவியா சொன்னது…

ஓ ! நம்ம மீனா ! வாங்க வாங்க ! எழுதுங்க மீனா

நாமக்கல் சிபி சொன்னது…

வாங்க மீனா! வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்க! எழுதுவீர்கள்!