செவ்வாய், நவம்பர் 02, 2004

தாமதம் ஏன்..

தாமதம் ம்..ம்.. என்ன செய்வது இந்த எழுத்தை சரி செய்ய எடுத்த
முயற்சியினால்தான் இத்தனை நாட்கள் ஆகிவிட்டது.

ஒருவாரமாக அடை மழை, உள்ளம் உடல் எல்லாம் குளிரில்
நடுங்குகிறது.மழையென்றதும் ஒரு நினைவு..

முன்பு ஒரு முறை உயிரெழுத்தின் முகப்புப் படத்திற்கு
(மழையில் நனைந்து மகிழும் ஒரு பெண்)பொருத்தமான
கவிதை எழுதவேண்டி (கவனிக்க) கவிஞர்களைக் கேட்டுக்கொள்ள
வழக்கம் போல் எனக்குள்ளிருந்த வான்கோழி துள்ளி எழ :))
நானும் எழுத!அன்று(4.8.03)நிறைவேறியது என் எவ்வளவோ
நாள் ஆசை.

'நனைந்த முகம்'

என் வீட்டின் வளவிற்குள்
குற்றாலத்தின் அருவியாய்
கூடருவாயில் கொட்டும்
அந்த மழையில்
குதூகலமாய்
முகம் நனைத்துக் குதித்த
என் பழைய நினைவு
பசுமையாய்...
இந்த முகம் பார்த்து!

''''''''''''''''''''''

இந்த மழையை நாம் எல்லாம் எப்படிப் பார்கிறோமோ, ஆனால் உயிரெழுத்தில் கிரி ஒரு மழைக் கவிதை எழுதியிருக்கிறார் வறுமையில் உழல்பவர்கள் எப்படி மழையை எதிர்கொள்கிறார்கள் என்று.

அதைப் படித்து இந்த விதத்தில் எப்போதாவது ஒரு கணமேனும் சிந்தித்தோமா என்று, நினைத்துப் பார்த்தேன், மனச் சங்கடமாகவும் அதை நினைத்து வெட்கமாகக் கூட இருந்தது. என்ன இப்படி இருந்திருக்கிறோமே என்று. ஓரிருவர்தான் மற்றவர்களின் இழப்புகளையும் இப்படி யோசிப்பார்கள் பெரும்பாலானவர்கள்(என்னப் போல்தான்)அவரவர்களின் கண் கொண்டுமட்டுமே பார்ப்பார்கள்,நீங்களும்தான் அதைப் படித்துப் பாருங்களேன்.

அவரின் மழைக் கவிதை:
மழை

ஊரே வேண்டி நிற்க
எனக்குமட்டும் மழை விருப்பமில்லை
ஏனென்றா கேட்டாய் தோழி?
காலடியில் நீரோடையும்
சுவரெல்லாம் நீர்வீழ்ச்சியும்
அடுப்பில் எரியும் நீரும் பார்த்திருக்கிறாயா நீ?
வா வந்துபார் எம் குடிசையில்!!
அடுக்களையும் அடுக்குமிடமும் ஒன்றாயிருக்க
படுக்கையும் கூரையும் பகலில் கைகோர்க்கும்
ஒற்றையறை குடிசைக்குள் பார்!

கொஞ்சம் முயன்றால் எண்ணிவிடலாம் வின்மீண்களையும்
எம்குடில் கூரைக்கண்களிடம் பலிக்காது உன் திறமை!
ஓட்டைக்கு ஒன்றாய் இறங்கினாலும்போதும்
காலடியில் ஓடையென்ன, ஓராழியே ஓடும் தோழி!

ஒருநாள் இல்லை
ஒவ்வொரு நாளும் பிழைத்திருக்க
இருட்டுமுதல் இருட்டும்வரை
ஓடவேணும் நாங்கள்
ஓரிடம் முடங்கினால் உண்டியேது?
கையூன்றி கரணமிட சேறு ஆகாது தோழி.

மாளிகை மாடமேறி மழை இரசிக்க ஆகும் உனக்கு.
இங்கே மழையன்றோ எம் குடிலேறும்,
எங்கே போவோம் நாங்கள்?

கால்கோப்பை நீர் உன் சிரமேறவே
மூன்றுநாள் தடுமல் உனக்கு
மேலிருந்து பொழியும் மழையில்
கால்வரை நனையும் எங்களை யோசித்தாயா தோழி?

சுத்தமான உங்கள் வீட்டின் கழிவுகள் எங்கே போகின்றன தெரியுமா??
சுற்றிவருகிறது எங்கள் வீடுகளையே!!
மழைக்கு பயந்து அவை ஒதுங்குவது
எங்கள் ஓட்டைக் குடிசையில்தான்!
நாங்கள் எங்கே ஒதுங்கட்டும் தோழி?
பணத்தின்மேல் பாயும் உங்கள்
பாடசாலைகள் நாங்கள் ஒதுங்கவும் வரிகேட்குமே??


இப்போது சொல் தோழி,
இன்னுமா என்னை மழையை இரசிக்கச் சொல்கிறாய்?
இன்னுமா என்னை மழையை விரும்பச்சொல்கிறாய்?

-கிரி

நன்றி கிரி.

(உங்கள் அனுமதி இல்லாமலே இங்கு போட்டதற்கு
மன்னித்துக் கொள்ளுங்கள் கிரி.)


இனி அடிக்கடி வருகிறேன்?

அன்புமிகு
மீனா.

5 கருத்துகள்:

Dr.Srishiv சொன்னது…

excellent ma, ரொம்ப அருமையாக இருக்கு, இவ்ளோ அருமையா எழுதறீங்க? அப்புறம் கவிதை தெரியாதுனு கதை விடரீங்களா? ஹ்ம்ம்ம்? இருக்கடும் இருக்கட்டும், 29த் சிங்கை மலேயா வரேன் இல்ல? அப்போ பேசிக்கறேன் உங்களை...:)
சிவா...@ ஸ்ரீஷிவ்..

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

என்னங்க ரொம்ப நாளாக் காணோமேன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். சத்தம் போடாம வாசக சாலையில் இருப்பீங்களாட்ட இருக்குது ?! :-)

Gnaniyar @ நிலவு நண்பன் சொன்னது…

hi friend

this mazai kavithai very superp..thankyou for isplaying it....thanks to kiri also...a great salute for both of u....

then thankyou for your comments for my article " tamil asiriyarukku oru mannippu kaditham"..nanri

ungalippattri sollungalean..?

manasu சொன்னது…

வார்த்தைகளில் காரைக்குடி தெரிகிறதே.... அப்பச்சிக்கு எந்த ஊரு????

meenamuthu சொன்னது…

சிவா! மலேசியா வந்த உன்னையும்(நம்மோடு சண்டை போட்ட சிவாவா!) உன் அன்பான குடும்பத்தினரையும் பார்த்தது ரொம்பவும் மகிழ்ச்சியா இருந்தது.

செல்வராஜ், அந்தப் பக்கம் வராம இருந்த நான் இப்போ பல பல காரணங்களால் ரொம்ப நாளா இந்தப் பக்கமும் வரமுடியாமலே போய்விட்டது.


நிலவு நண்பரே,ம்ம் உங்களின் கவிதைகளை மிகவும் ரசிப்பேன்.

>>ungalippattri sollungalean..? <<

பிறந்தது காரைக்குடிக்கு மிக அருகில் இருக்கும் சிறுகூடல்பட்டி,கணவரின் ஊர் மகிபாலன்பட்டி.தற்பொழுது நீண்ட வருடங்களாக மலேசியாவில் இருக்கிறோம்.


மனசு,(சொந்தப்பேரை சொல்லக்கூடாதா?)
நா..அப்பச்சி இல்லை ஆத்தா :)..
விபரம் நிலவு நண்பனின் கேள்விக்கு என் பதில் பார்க்க.


நான் என் வாசகர் சாலைக்கு வந்து(இதொன்று இருக்கிறதே மறந்து போய்விட்டேன்!)எவ்வ்வ்வ்வ்வ்வ்ளவோ நாள் ஆச்சு!
அதான் இந்த தாமதமான பதில் :)

எல்லோருக்கும் என் நன்றி.